என் மலர்
நீங்கள் தேடியது "tailor suicide"
கவுண்டம்பாளையம்:
கோவை கவுண்டம் பாளையம் பி அண் டி காலனி குமரன் நகரை சேர்ந்தவர் ராஜகுரு (44). டெய்லர். இவருக்கு திருமணமாகி ருக்மணி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
ராஜகுரு மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். இதனால் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்துள்ளார். இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனால் வேதனை அடைந்த ருக்மணி தனது குழந்தைகளுடன் தெலுங்கு பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி -குழந்தைகள் பிரிந்து சென்றதால் மன வேதனை அடைந்த ராஜகுரு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடைரோடு:
திண்டுக்கல் அருகில் உள்ள கொடைரோடு தர்மாபுரியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது43). திருப்பூரில் தங்கி டெய்லர் வேலை பார்த்து வந்தார்.
தனது மனைவி கவுரி மற்றும் மகளுடன் வசித்து வந்த தர்மராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடைரோட்டில் உள்ள பெற்றோரை பார்க்க வந்தார்.
இன்று அதிகாலை தர்மாபுரி ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக வேதனையில் இருந்த தர்மராஜ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.






