search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilgiri news ஊட்டி செய்திகள் ஊட்டி நியூஸ் நீலகிரி செய்திகள் நீலகிரி நியூஸ்"

    மழையையும் பொருட்படுத்தாமல், சுற்றுலா பயணிகள் குடைபிடித்த படியும், சிலர் மழையில் நனைந்தபடியும் கண்காட்சியை பார்வையிட்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா கடந்த 7-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழ கண்காட்சி நேற்றுமுன்தினம் தொடங்கியது.

    கண்காட்சியையொட்டி பூங்கா நுழைவு வாயில் பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திராட்ைச பழங்களை கொண்டு ராட்சத கழுகு அலங்காரம், தேன் வண்டு, பாண்டாகரடி, புலி, டிராகன், மயில் தாஜ்மஹால் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருந்தது.

     பழ கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையொட்டி காலை முதலே குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. 

    அவர்கள் பூங்காவில் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த டிராகன், மயில், புலி, தாஜ்மஹால், பூண்டி அணை உள்ளிட்டவற்றை கண்டு ரசித்து புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    குன்னூரில் நேற்று மதியத்திற்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல், சுற்றுலா பயணிகள் குடைபிடித்த படியும், சிலர் மழையில் நனைந்தபடியும் கண்காட்சியை பார்வையிட்டனர்.

    பழ கண்காட்சியை நேற்று முன்தினம் 10,500 பேரும், நேற்று 15, 500 பேர் என  2 நாட்களில் 26 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர். நிறைவு நிகழ்ச்சியில் சிறந்த அலங்காரங்கள் அமைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் விழா பூங்காவில் நடைபெற்றது. 

    விழாவில் கலெக்டர் அம்ரித் பங்கேற்று, சிறந்த அலங்காரம் அமைத்தவர்களுக்கு சுழல் கோப்பை உள்பட 102 பேருக்கு கோப்பைகளை வழங்கினார்.
    அனைத்து நீதிமன்றங்களும் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
    ஊட்டி:

    ஊட்டி தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையில் மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது. நீதிபதிகள் சதீஷ்குமார், பவானி சுப்பராயன், மாவட்ட நீதிபதி முருகன், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு தலைமை முனீஸ்வர்நாத் பண்டாரி பேசியதாவது:-

    நீதித்துறைக்கு தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து முழு ஒத்துழைப்பும் வழங்கி வருகிறது. இதற்காக எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறையின் அனைத்து உள்கட்டமைப்பு பணிகளுக்கு அனைத்து துறையினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் அனைத்து நீதிமன்றங்களும் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    பின்னர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நிலங்கள் நீதித்துறைக்கு ஒப்படைப்பு செய்வது தொடர்பாக நிலுவை இனங்களை தலைமை நீதிபதி ஆய்வு செய்தார். கூட்டத்தில் நிரந்தர மக்கள் மக்கள் நீதிமன்ற தலைவர் ஸ்ரீதரன், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ்ராவத், மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நெடுஞ்சாலைதுறை சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் அனைத்து பணிகளின் தரம் மற்றும் கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
    மஞ்சூர்:

     ஊட்டி கோட்டத்தில் சாலை மேம்பாட்டு பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைதுறை கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

    நெடுஞ்சாலைதுறை சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் அனைத்து பணிகளின் தரம் மற்றும் கட்டுமானங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் உள் தணிக்கை செய்ய வேண்டும் என நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார். 

    இதன்படி நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான உள் தணிக்கை நடவடிக்கைகள் துவக்கப் பட்டுள்ளது. இதற்காக  நபார்டு மற்றும் கிராம சாலைகள் சேலம் மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் அருள்மொழி தலைமையில் கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர் அசோகன், உதவி பொறியாளர்கள் ரமேஷ், அரவிந்த் ஆகியோர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

    இக்குழுவினர் ஊட்டி கோட்டம் குந்தா பிரிவுகுட்பட்ட எம்.பாலாடா-பி.மணியட்டி வழி கல்லக்கொரைஹடா-காந்திநகர் பகுதிகளில் சாலையின் நீளம், அகலம், கனம், தார் கலவை தரம், காங்கிரீட் தடுப்புசுவர், மற்றும் வடிகால் பணிகளின் தரம் குறித்து ஆய்வு மற்றும் உள் தணிக்கை மேற்கொண்டார்கள். 

    ஆய்வின்போது நெடுஞ்சாலைதுறை இளநிலை பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் பெருமாள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர். 

    இந்த குழுவினர் குன்னூர் நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தைச் சேர்ந்த லவ்டேல் கேத்தி அச்சனக்கல் கெரடா சாலையிலும் சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.  
    கோடை சீசன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக தூறல் மழை பெய்து வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக தூறல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று நண்பகல் சுமாா் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ெரயில்வே பாலத்தின் அடியில் மழை நீா் தேங்கியதால் அதில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    இந்த பள்ளியை ஊர் பொதுமக்கள் ரூ.15 லட்சம் செலவில் நவீன மையமாக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கில வழி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. 

    தற்போது இந்த பள்ளியை ஊர் பொதுமக்கள் ரூ.15 லட்சம் செலவில் நவீன மையமாக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கில வழி  நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 

    இந்த பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்து கொண்டு பள்ளியை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு தேடி கல்வி திட்டத்தை கொண்டு  வந்துள்ளர். நாடு வளம் பெற வேண்டும் என்றால் கல்வி மிக முக்கியம்.

    எனவே ஆங்கில பள்ளிக்கு இணையாக நவீன மையமாக்கப் பட்ட பள்ளி அறைகள், ஸ்மார்ட்  கிளாஸ், நவீன முறையில் இருக்கை வசதி உள்ளிட்ட  வகுப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதற்கு முன்னாள் இப்பள்ளியில் பயின்ற  மாணவர்கள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இது போன்று பல பள்ளிகளை மேம்படுத்தினால் கல்வி வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் பேசினார்.
     
    இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசரூதின், வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, ஊராட்சி ஒன்றிய   தலைவர் சுனிதா நேரு, ஜெகதளா பேருராட்சி தலைவர் பங்கஜம்,  தி.மு.க. பொதுகுழு உறுப்பினர் செல்வம் மற்றும் முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    கோத்தகிரி வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் தொடக்க விழா நேரலை நெடுகுளா கெங்கரை தேனாடு மற்றும் குஞ்சப்பனை ஆகிய நான்கு ஊராட்சிகளிலும் காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.
    அரவேணு:

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்  தமிழக முதல்-அமைச்சர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் தொடக்க விழா நேரலை நெடுகுளா கெங்கரை தேனாடு மற்றும் குஞ்சப்பனை ஆகிய நான்கு ஊராட்சிகளிலும் காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.  நெடுகுளா கிராமத்தில் நடைபெற்ற  தொடக்க விழாவில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய  தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார்.       

    கோத்தகிரி வட்டாட்சியர் காயத்திரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், ஊராட்சி தலைவர் சுகுணா, சிவா மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   இவ்விழாவில் தோட்டக்கலை உதவி இயக்குனர் பிஎஸ் ஐஸ்வர்யா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  

    மேலும் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை உதவி வேளாண்மை அலுவலர் வெற்றிவேல் குமார் வேளாண் வணிகத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.  இவ்விழா நடைபெற்ற 4 கிராம ஊராட்சிகளிலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 8 வகையான காய்கறிகள் விதை தொகுப்பு 50 சதவீத மானியத்தில் கைத்தெளிப்பான் மற்றும் இயற்கை வேளாண் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.  

    முன்னதாக உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித் அவர் வரவேற்றார்.  இவ்விழாவில் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.  இறுதியாக பிரசாந்த் வட்டார தொழில்நுட்ப மேலாளர் நன்றியுரை கூறினார்.
    கடந்த 30 ஆண்டுகளாக கோத்தகிரி நீதிமன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தின் தரைதளத்தில் செயல்பட்டு வந்தது.
    அரவேணு:

    நீலகிரி மாவட்டத்துக்கு புதிய நீதிபதியாக பொறுப்பேற்ற முருகன் கோத்தகிரிக்கு வந்தார். அவர் வருவாய்த் துறையால் நீதிமன்றம் கட்ட தேர்வு செய்யப்பட்ட சக்திமலைப் பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடந்த 30 ஆண்டுகளாக கோத்தகிரி நீதிமன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தின் தரைதளத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது அதன் இடவசதி குறைவாக உள்ளது.இதனால் வக்கீல் சங்கத்தினர் புதிய கட்டிடம் வேண்டும் என கேட்டதன் பேரில், புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான நிலம் வருவாய்த் துறையால் சக்தி மலை பகுதியில் ஒதுக்கப்பட்டது.

    அதனை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து, நிலத்தின் பரப்பளவு மற்றும் கட்டிடம் கட்டுவதற்கு அந்த இடம் ஏதுவாக இருக்குமா? என கோத்தகிரி தாசில்தார் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது ஒரு ஏக்கர் நிலம் எதிர்காலத்தில் கோர்ட்டு விரிவாக்கத்திற்கு ஏற்றதாக இருக்காது. எனவே, மாவட்ட கலெக்டருடன் கலந்து பேசி கூடுதலாக 4 ஏக்கர் நிலத்தைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின் போது கோத்தகிரி குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வனிதா, தாசில்தார் காயத்ரி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    மாவட்டந்தோறும் பல்வேறு மரங்களை வளர்த்து இயற்கையை காத்திட அனைவரும் ஒன்றிணைந்து செயல் ஆற்ற வேண்டும்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் வனத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பசுமைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
     
    கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்று ச்சுழலை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மாநிலத்தின் வனப்பகுதி அளவை உயர்த்திட அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்படி மாவட்டந்தோறும் பல்வேறு மரங்களை வளர்த்து இயற்கையை காத்திட அனைவரும் ஒன்றிணைந்து செயல் ஆற்ற வேண்டும். மரங்கள் வளர்ப்பதால் இயற்கையாகவே ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று, போதுமான ஆக்சிஜன் கிடைக்கும். ேமலும் சுற்றுச்சுழலில் உள்ள கார்பன்டை ஆக்சைடு மரங்கள் உட்கொள்வதால் அதிக மழைப்பொழிவு ஏற்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

    தமிழகத்தில் வனப்பகுதியை 33 சதவீதம் அதிரிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் தொடர்ந்து அறிவுறுத்துவதால், நீலகிரி மாவட்டத்தில் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வருவாய்த்துறை, வனத்துறை, பொது ப்பணி த்துறை, தோட்டக்க லைத்துறை, நகராட்சி, பேரூராட்சிகள், இந்து சமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறையினர் தங்கள் அலுவலகம் உள்ளி ட்ட துறையினர் தங்கள் அலுவலகம் மற்றும் துறைக்கு உட்பட்ட இடங்களில் வன பரப்பளவை உயர்த்திட வேண்டும்.

    மேலும் எவ்வளவு காலியிடம் உள்ளது என்பதை கண்டறிந்து, அடுத்த மாதம் 10-ந் தேதிக்கு பூர்த்தி செய்ய விண்ணப்பத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் எனவும், நீலகிரி மாவட்டம் முன் உதாரண மாவட்டமாக திகழ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
    நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைக்காலம் என்பதால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
     
    மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மோட்டார் சைக்கிளில் வருவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மோட்டார் சைக்கிளில் வரும் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது குறித்தும், முறையாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து குறுகிய மலைப்பாதை என்பதால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. அதிலும் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகம் ஏற்ப்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே தலைக்கவசம் முறையாக முன், பின் அமர்ந்திருப்பவர் கட்டாயம் அணிய வேண்டும்,  போக்குவரத்து வழி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், வளைவுகளில் ஒலி எழுப்ப வேண்டும், 

    வளைவுகளில் முந்த கூடாது, அதிவேகமாக வாகனத்தை இயக்க கூடாது போன்ற பல்வேறு சாலை விதிகளை பின்பற்ற கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் ஜான் தலைமைலான காவலர்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    ×