search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்
    X
    கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்

    கோத்தகிரியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம்

    கோத்தகிரி வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் தொடக்க விழா நேரலை நெடுகுளா கெங்கரை தேனாடு மற்றும் குஞ்சப்பனை ஆகிய நான்கு ஊராட்சிகளிலும் காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.
    அரவேணு:

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்  தமிழக முதல்-அமைச்சர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் தொடக்க விழா நேரலை நெடுகுளா கெங்கரை தேனாடு மற்றும் குஞ்சப்பனை ஆகிய நான்கு ஊராட்சிகளிலும் காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.  நெடுகுளா கிராமத்தில் நடைபெற்ற  தொடக்க விழாவில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய  தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார்.       

    கோத்தகிரி வட்டாட்சியர் காயத்திரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், ஊராட்சி தலைவர் சுகுணா, சிவா மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   இவ்விழாவில் தோட்டக்கலை உதவி இயக்குனர் பிஎஸ் ஐஸ்வர்யா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  

    மேலும் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை உதவி வேளாண்மை அலுவலர் வெற்றிவேல் குமார் வேளாண் வணிகத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.  இவ்விழா நடைபெற்ற 4 கிராம ஊராட்சிகளிலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 8 வகையான காய்கறிகள் விதை தொகுப்பு 50 சதவீத மானியத்தில் கைத்தெளிப்பான் மற்றும் இயற்கை வேளாண் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.  

    முன்னதாக உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித் அவர் வரவேற்றார்.  இவ்விழாவில் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.  இறுதியாக பிரசாந்த் வட்டார தொழில்நுட்ப மேலாளர் நன்றியுரை கூறினார்.
    Next Story
    ×