search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசுமைக்குழு கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.
    X
    பசுமைக்குழு கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

    நீலகிரியில் மாவட்ட அளவிலான பசுமைக்குழு கூட்டம்

    மாவட்டந்தோறும் பல்வேறு மரங்களை வளர்த்து இயற்கையை காத்திட அனைவரும் ஒன்றிணைந்து செயல் ஆற்ற வேண்டும்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் வனத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பசுமைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
     
    கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்று ச்சுழலை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மாநிலத்தின் வனப்பகுதி அளவை உயர்த்திட அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்படி மாவட்டந்தோறும் பல்வேறு மரங்களை வளர்த்து இயற்கையை காத்திட அனைவரும் ஒன்றிணைந்து செயல் ஆற்ற வேண்டும். மரங்கள் வளர்ப்பதால் இயற்கையாகவே ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று, போதுமான ஆக்சிஜன் கிடைக்கும். ேமலும் சுற்றுச்சுழலில் உள்ள கார்பன்டை ஆக்சைடு மரங்கள் உட்கொள்வதால் அதிக மழைப்பொழிவு ஏற்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

    தமிழகத்தில் வனப்பகுதியை 33 சதவீதம் அதிரிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் தொடர்ந்து அறிவுறுத்துவதால், நீலகிரி மாவட்டத்தில் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வருவாய்த்துறை, வனத்துறை, பொது ப்பணி த்துறை, தோட்டக்க லைத்துறை, நகராட்சி, பேரூராட்சிகள், இந்து சமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறையினர் தங்கள் அலுவலகம் உள்ளி ட்ட துறையினர் தங்கள் அலுவலகம் மற்றும் துறைக்கு உட்பட்ட இடங்களில் வன பரப்பளவை உயர்த்திட வேண்டும்.

    மேலும் எவ்வளவு காலியிடம் உள்ளது என்பதை கண்டறிந்து, அடுத்த மாதம் 10-ந் தேதிக்கு பூர்த்தி செய்ய விண்ணப்பத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் எனவும், நீலகிரி மாவட்டம் முன் உதாரண மாவட்டமாக திகழ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×