search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்.
    X
    விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்.

    கோத்தகிரியில் ஹெல்மெட் அணிவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

    நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைக்காலம் என்பதால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
     
    மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மோட்டார் சைக்கிளில் வருவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மோட்டார் சைக்கிளில் வரும் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது குறித்தும், முறையாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து குறுகிய மலைப்பாதை என்பதால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. அதிலும் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகம் ஏற்ப்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே தலைக்கவசம் முறையாக முன், பின் அமர்ந்திருப்பவர் கட்டாயம் அணிய வேண்டும்,  போக்குவரத்து வழி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், வளைவுகளில் ஒலி எழுப்ப வேண்டும், 

    வளைவுகளில் முந்த கூடாது, அதிவேகமாக வாகனத்தை இயக்க கூடாது போன்ற பல்வேறு சாலை விதிகளை பின்பற்ற கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் ஜான் தலைமைலான காவலர்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    Next Story
    ×