என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 169485"

    கோவில் திருவிழாவையொட்டி கபடி போட்டிக்கு ராஜராஜன் கல்லூரிக்கு சாம்பியன் பட்டம் பெற்றவர்களை படத்தில் காணலாம்.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையம்மன் கோவில் செவ்வாய் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி செஞ்சை குடிக்காத்தான் திடலில் நடந்தது.

    2 நாட்கள் நடந்த போட்டிகளில்தூத்துக்குடி,கன்னியாகுமாரி, திருச்செங்கோடு உள்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன.நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் அமராவதி புதூர் ராஜராஜன் பொறியியல் கல்லூரி அணியும், காரைக்குடி லலிதா பேக்ஸ் அணியும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

    இதில் ராஜராஜன் பொறியியல் கல்லூரி அணி  வெற்றிபெற்று முதல் பரிசான ரூ.50 ஆயிரத்தை வென்றது.2-ம் பரிசான ரூ.30 ஆயிரத்தை காரைக்குடி லலிதா பேக்ஸ் அணியும்.3-வது, 4-வது பரிசுகளை  ராயல் சர்வா அணியும்,சுப்பையா பிரதர்ஸ் அமராவதி புதூர் அணியினரும் பெற்றனர்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை  சிவகங்கை மாவட்ட அமெச்சூர் கழக சேர்மன் வேலு, நாம் தமிழர் கட்சி மாநில செயலாளர் மாறன், ஆறுமுகம், செழியன், கார்த்திக்நேரு உள்பட காரைக்குடி,செஞ்சை மண்ணின் மைந்தர்கள்   செய்திருந்தனர்.
    ‘இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி மீண்டும் கோப்பையை வெல்லும்’ என்று பயிற்சியாளர் ஜான் கிரிகோரி தெரிவித்தார். #ChennaiyinFC #JohnGregory
    பானாஜி:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொல்கத்தாவில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டி தொடரில் கொல்கத்தா அணி 2014, 2016-ம் ஆண்டுகளிலும், சென்னையின் எப்.சி. அணி 2015, 2017-ம் ஆண்டுகளிலும் கோப்பையை உச்சி முகர்ந்துள்ளன. இரு அணிகளும் 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. மலேசியாவில் முதல் கட்ட பயிற்சி முகாமை முடித்த சென்னையின் எப்.சி. அணி தற்போது கோவாவில் பயிற்சி பெற்று வருகிறது.

    இந்த நிலையில் சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி (இங்கிலாந்து) அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த போட்டி தொடரில் எந்தவொரு அணியும் தொடர்ச்சியாக கோப்பையை வென்றது கிடையாது என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் சென்னை அணியின் பயிற்சியாளர் ஒப்பந்தத்தை புதுப்பித்ததன் நோக்கமே மீண்டும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பது தான். தொடர்ச்சியாக கோப்பையை வென்ற முதல் அணி சென்னையின் எப்.சி. என்ற பெருமையை பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.

    இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட்ஸ் அணியின் பயிற்சியாளர் அலெக்ஸ் பெர்குசன் தனது உதவி பயிற்சியாளர்களை மாற்றி புதிய யுக்திகளை புகுத்தி அணியை வெற்றிகரமாக செயல்பட வைப்பார். அந்த பாணியை தான் நானும் கடைப்பிடித்து வருகிறேன். அதன்படி சென்னை அணியின் உதவி பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். புதிய உதவி பயிற்சியாளர்களாக பால் குரோவ்ஸ், கெவின் கிச்ஹாக் (கோல் கீப்பிங்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே வகையான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் சலிப்பு ஏற்பட்டு விடும். அதேபோல் தான் ஒரே உதவி பயிற்சியாளர்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதும். புதிய உதவி பயிற்சியாளர்களை சேர்ப்பதன் மூலம் புதிய யோசனைகள் கிட்டும். அந்த மாதிரியான மாற்றத்தின் மூலம் தான் கடந்த ஆண்டு நாங்கள் கோப்பையை வென்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ChennaiyinFC #JohnGregory

    பெரம்பலூரில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சென்னை அணி முதலிடம் பெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாஸ் கைப்பந்து சங்கம் மற்றும் திருவள்ளுவர் மோட்டார் சங்கம் சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 6-வது ஆண்டு மாநில அளவிலான பகல் மற்றும் இரவு மின்னொலி கைப்பந்து போட்டிகள் பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் மைதானத்தில் 2 நாட்கள் நடந்தன. போட்டிகளை பெரம்பலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாணிக்கம், ஈஸ்வர் திருநாவுக்கரசு மற்றும் நாராயணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பெரம்பலூர், சேலம், கடலூர், சென்னை, நாமக்கல், திருச்சி, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் பங்கேற்றன.

    இறுதி போட்டியில் சென்னை அணியும், எஸ்.ஆடுதுறை அணியும் மோதின. இதில் சென்னை அணி 24 புள்ளிகள் பெற்று நேர்செட்டில் எஸ்.ஆடுதுறை அணியை வென்று வெற்றி கோப்பையை கைப்பற்றியது, எஸ்.ஆடுதுறை 14 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், அரியலூர் இடையக்குறிச்சி அணி 24 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், மாஸ் கிளப் அணி 20 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பெற்றன.

    தொடர்ந்து வெற்றிபெற்ற அணிகளுக்கு தொழிற் பயிற்சி நிலைய தாளாளர் எசனை நல்லுசாமி, சீலன், தனலட்சுமி சீனிவாசன் குழுமம் சார்பில் முரளி, உடற்கல்வி இயக்குனர் சரணவன் ஆகியோர் முதல் பரிசாக ரூ.15ஆயிரம், 2-வது பரிசாக ரூ.12ஆயிரம், 3-வது பரிசாக ரூ.9 ஆயிரம், 4-வது பரிசாக ரூ.6 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை-சான்றிதழ்களை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் அதியமான் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். 
    ×