என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 127926"

    சங்ககிரியை சேர்ந்தவர் ஜேடர்பாளையம் தடுப்பணையில் குளித்த ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் சாவு.
    பரமத்திவேலூர்:

    சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவார பகுதியை சேர்ந்தவர் ஷாநவாஸ் (வயது 40). இவர் அப்பகுதியில் ஐஸ்கிரீம் கடை வைத்து நடத்தி வந்தார். 

    இவர் குடும்பத்துடன் சுற்றுலா தனது மனைவி சுமையா மற்றும் இவரது மகன்கள் உமர்சாகித் (15), சையத் சமீத் (13) மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 15 பேர் பரமத்தி வேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையத்தில் காவிரியாற்றில் உள்ள படுகை அணை பூங்காவிற்கு சுற்றுலா வந்தனர்.
     
    பின்னர் காவிரி ஆற்றின் அருகில் உள்ள ராஜ வாய்க்காலில் அனைவரும் குளித்தனர். அப்போது ஷாநவாஸ் மட்டும் ஆழமான பகுதியில் குளித்தார். 

    அப்போது  திடீரென அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    தண்ணீரில் மூழ்கி பலி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் காணாமல் போன ஷாநவாஸை ராஜா வாய்க்காலில் தேடினர். 

    தண்ணீர் அதிகமாக சென்றதால் தண்ணீரில் மூழ்கியவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் போலீசார் பொதுப்பணித்துறையினர் உதவியுடன் ராஜா வாய்க்காலின் சட்டர்களை அடைத்தனர். 

    இதில் ஷாநவாஸ் ராஜா வாய்க்காலில் மூழ்கி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  போலீசார் அவரது ‌உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
     
    ஷாநவாஸ் உடலை பார்த்து அவரது மனைவி, மகன்கள், உறவினர்கள் கதறி அழுதனர்.   இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவையில் காணாமல் போன நாயை அதன் உரிமையாளர் பேனர் வைத்து தேடி வருகிறார். மேலும் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
    கோவை:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் தீபக்(வயது 45). ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் தனது வீட்டில் 8 மாதமாக ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்தார்.

    ராய் என்று பெயரிடப்பட்ட அந்த நாய் கடந்த ஜனவரி 24-ந்தேதி வீட்டில் இருந்து காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் நாய் கிடைக்கவில்லை.

    நாய் மீது அதிக பாசம் வைத்திருந்த தீபக் தற்போது அந்த நாயை தேடி கோவை முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைத்து தீவிரமாக தேடி வருகிறார்.

    மேலும் ஒரு டெம்போவில் நாயின் படத்துடன் கூடிய பேனர் வைத்து கோவை முழுவதும் சுற்றி வருகிறது.

    தனது நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்க இருப்பதாக உரிமையாளர் தீபக் தெரிவித்துள்ளார்.
    மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து லீவு போட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை கட்டி வைத்து சவுக்கால் அடித்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். #OwnerWhipsEmployee
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர் 5-6 நாட்களாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் அந்த ஊழியரை வரவழைத்து திட்டி அடித்துள்ளார். அத்துடன் விடாமல், கட்டி வைத்து சவுக்கால் அடித்துள்ளார். 

    ஊழியரை அடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர், ஊழியரை பில்லரில் கட்டி வைத்து அடிக்கிறார். உரிமையாளரின் நண்பரும் உடன் இருக்கிறார். அப்போது, அந்த ஊழியர் விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டதால் 5-6 நாட்களாக வேலைக்கு வரமுடியவில்லை, என்று கூறுகிறார். 

    எனினும் அவர் கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ளாத உரிமையாளர், காலில் அடிபட்டால் என்ன, கூப்பிட்டால் வரமுடியாதா? என்று கேட்டு தொடர்ந்து அடிக்கிறார்.  ஊழியரை தாக்கியது தொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். #OwnerWhipsEmployee

    ×