search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudan clash"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூடானில் தவித்த வெளிநாட்டினரை மீட்கும் நடவடிக்கைக்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
    • மத்திய கார்டூமில் உள்ள ஒரு மார்க்கெட் அருகே விமான தாக்குதல் நடத்தப்பட்டது.

    கார்டூம்:

    ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம்-துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது.

    இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அப்பாவி மக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

    சூடானில் தவித்த வெளிநாட்டினரை மீட்கும் நடவடிக்கைக்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சண்டை தொடர்ந்தபடி இருந்தது.

    சண்டையை நிறுத்தி விட்டு இருதரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின.

    இதற்கிடையே இரு ராணுவ தளபதிகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டனர். இதையடுத்து சவுதி அரேபியாவில் நேற்று முன்தினம் அமைதி பேச்சு வார்த்தை தொடங்கியது. இதில் ராணுவ பிரதிநிதிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் சூடானில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரமடைந்து உள்ளது. தலைநகர் கார்டூமில் வான் வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது அந்த நகரத்தை உலுக்கியது. குண்டு வீச்சு சத்தங்கள் தொடர்ந்து கேட்டதால் மக்கள் அச்ச மடைந்துள்ளனர். மத்திய கார்டூமில் உள்ள ஒரு மார்க்கெட் அருகே விமான தாக்குதல் நடத்தப்பட்டது.

    பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் இரு தரப்பினரும் தங்களது தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளனர். அமைதி பேச்சுவார்த்தையை அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஏற்பாடு செய்தன.

    இது தொடர்பாக சவுதி அரேபியா தூதர் ஒருவர் கூறும்போது, பேச்சு வார்த்தை எந்த முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை. இரு தரப்பும் தங்களை போரில் வெல்லும் திறன் கொண்டவர்கள் என்று கருதுகிறார்கள். போரில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறார்கள் என்றார்.

    • சூடானில் போர் முனையில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
    • இந்திய விமானப் படை விமானம் மூலம் 47 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

    கார்ட்டூம்:

    சூடான் நாட்டில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சூடானில் போர் முனையில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

    ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்த பணியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 16 விமானங்கள் மற்றும் 5 போர் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    மீட்கப்படும் இந்தியர்கள் விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

    இன்று இந்திய விமானப் படை விமானம் மூலம் 47 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

    கடந்த 9 நாட்களில் சூடானில் இருந்து வெற்றிகரமாக 3,862 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.

    • ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளது.
    • துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு என தாக்குதல் நடப்பதால் சூடான் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    கார்டூம்:

    ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவமும், துணை ராணுவமும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு என தாக்குதல் நடப்பதால் சூடான் மக்கள் தவித்து வருகிறார்கள். 3 வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் உள்நாட்டு போரால் ஆயிரக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்து வருகிறார்கள்.

    இந்த சண்டையில் அப்பாவி மக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் சூடானில் சண்டையை நிறுத்துமாறு ஐ.நா.சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

    சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்பதற்காக போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகள், கப்பல், விமானங்களை அனுப்பி தங்களது குடிமக்களை மீட்டு வருகின்றன.

    போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டாலும் சில இடங்களில் தொடர்ந்து சண்டை நடந்தது. இதற்கிடையே பேச்சு வார்த்தைக்கு ராணுவ தளபதியும், துணை ராணுவ தளபதியும் ஒப்புக் கொண்டனர். இந்த நிலையில் சூடானில் மேலும் 7 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தெற்கு சூடானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சூடானில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் 7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு சம்மதம் வழங்கி உள்ளனர்.

    அதன்படி மே 4-ந்தேதி (நாளை) முதல் 11-ந்தேதி வரை 7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும். இதற்காக தெற்கு சூடான் அதிபர் சால்வா கீர் மயார்தீத்துடன் இரு தரப்பினரும் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டனர்.

    அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் பிரதிநிதிகள் விவரங்கள், தேதி, இடம் ஆகியவற்றை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

    • சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
    • சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்கள் பத்திரமாக இன்று தாயகம் திரும்பினர்.

    உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்துவரப்பட்டனர். ஜெட்டாவில் இருந்து 246 இந்தியர்களுடன் கிளம்பிய இந்திய வான்படை விமானம் இன்று மும்பையில் தரையிறங்கியது.

    இன்று காலை 11 மணிக்கு ஜெட்டாவில் இருந்து கிளம்பிய விமானம் 3.30 மணி அளவில் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன்படி சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்கள் பத்திரமாக இன்று தாயகம் திரும்பியுள்ளனர்.

     

    ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. கடும் தாக்குதல் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் பேருந்து மூலம் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பின் சூடான் துறைமுகத்தில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு இந்தியர்கள் கப்பல் மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர்.

    சூடானில் தாக்குதல் நடைபெற்று வரும் கார்டோம் மற்றும் சூடான் துறைமுகம் இடையிலான தூரம் 850 கிலோமீட்டர்கள் ஆகும். தற்போதைய பதற்றமான சூழ்நிலையில், இந்த தூரத்தை பேருந்து மூலம் கடக்க 12 முதல் 18 மணி நேரங்கள் வரை ஆகிறது. உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூடானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    • சூடானில் தமிழ் மக்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கி தவிக்கின்றனர்.
    • உதவி தேவைப்படுபவர்கள் 011-2419 3100, 9289516711 என்ற டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி, செல்போன் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சூடான் நாட்டில் நடைபெற்று வரும் ராணுவம் மற்றும் உள்நாட்டு படைப்பிரிவினர்களுக்கு இடையேயான மோதல்களினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கி தவிக்கின்றனர்.

    அவர்களை மீட்க கோரி அங்குள்ள தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வருவதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி உடனடியாக அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்களை பகிரக் கோரியும், அவர்களை பாதுகாப்பாக தமிழகம் மீட்க கோரியும் தமிழ்நாடு அரசின் சார்பாக கடிதம் மூலம் சூடான் மற்றும் ஜெத்தாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் கோரப்பட்டு உள்ளது.

    மேலும், சூடானில் உள்ள தமிழர்களுடன் 'வாட்ஸ் அப்' குழுக்கள் மூலமாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு அவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் சூடானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்படுகிறது.

    தற்போது ஒன்றிய அரசின் 'ஆபரேசன் காவிரி' என்ற திட்டத்தின் மூலமாக சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு, சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவிற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி மற்றும் மும்பைக்கு அழைத்து வரக்கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ரஷியா-உக்ரைன் போரின்போது, விமானம் மூலம் டெல்லி மற்றும் மும்பைக்கு அழைத்து வரப்பட்ட தமிழர்களை, தமிழ்நாடு அரசின் செலவில் சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லப்பட்டது போன்று இந்த விவகாரத்திலும் நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்திலும், சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்திலும் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    உதவி தேவைப்படுபவர்கள் 011-2419 3100, 9289516711 என்ற டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி மற்றும் செல்போன் எண்ணுக்கும், tnhouse@nic.in என்ற இணையதளம் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    96000 23645, nrtchennai@gmail.com என்ற சென்னையில் உள்ள அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தின் செல்போன் எண் மற்றும் இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சூடானில் கடற்படை கப்பல் உதவியுடன் இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
    • வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

    புதுடெல்லி:

    உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூடானில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன. சூடானில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற பெயரிலான திட்டத்தை இந்திய அரசு தொடங்கி உள்ளது.

    அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக கப்பல்களும், விமானங்களும் தயாராக உள்ளன. இதன்படி, சூடானின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இந்தியர்கள் சுமார் 500 பேர் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அதன்பின், இந்தியாவின் கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். சுமேதா உதவியுடன் அவர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.

    பின்னர் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து 360 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இன்று மாலை புறப்பட்ட தனி விமானம் புதுடெல்லி வந்து சேர்ந்தது. இத்தகவலை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

    அதில், 'இந்தியா தனது சொந்தங்களை மீண்டும் வரவேற்கிறது. ஆபரேசன் காவேரி மூலம் 360 இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் முதல் விமானம் புதுடெல்லியை அடைந்தது' என தெரிவித்துள்ளார்.

    • சூடானில் இருந்து 500 இந்தியர்களுடன் கப்பல் புறப்பட்டு சவுதி அரேபியாவுக்கு இன்று வந்தது.
    • சூடானில் 300 தமிழர்கள் இருப்பதாக கடைசியாக வந்த தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சூடான் நாட்டில் உள்நாட்டு போரால் 3 ஆயிரம் இந்தியர்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். போரால் தவித்து வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்க இந்திய அரசு "ஆபரேஷன் காவேரி" என்ற பெயரில் மீட்பு நட வடிக்கை எடுத்து வருகிறது.

    போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல் மூலம் மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளது.

    சூடானில் தமிழ்நாட்டை சேர்ந்த 84 பேர் சிக்கி இருப்பதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்தது. அவர்களை பத்திரமாக மீட்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    இதற்கிடையில் சூடானில் சிக்கியுள்ள தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. முதல் பட்டியலில் 84 தமிழர்கள் என்றும் 2-வது பட்டியலில் 136 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

    300 தமிழர்கள் வரை அங்கு இருப்பதாக சூடான் நாட்டு இந்திய தூதரகம் மூலம் தெரிய வந்துள்ளது. 300 தமிழர்களையும் மீட்க மத்திய அரசுடன் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான், வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை ஆணையர் ஜெசிந்தா ஆகியோர் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேசி வருகின்றனர்.

    சூடானில் இருந்து 500 இந்தியர்களுடன் கப்பல் புறப்பட்டு சவுதி அரேபியாவுக்கு இன்று வந்தது. அங்குள்ள ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானம் மூலம் அவர்கள் டெல்லி வருகின்றனர். அங்கிருந்து அவரவர் மாநிலங்களுக்கு அழைத்து செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    முதல் பயணத்தில் வந்த இந்தியர்களில் மிக குறைந்த அளவில்தான் தமிழர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 25 தமிழர்கள் முதல் விமானத்தில் வரலாம் எனவும் முழு விவரங்கள் தெரியவில்லை என்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெசிந்தா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    சூடானில் 300 தமிழர்கள் இருப்பதாக கடைசியாக வந்த தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து முதல் விமானம் மூலம் 300 இந்தியர்கள் இன்று டெல்லி வருகிறார்கள். அவர்களில் தமிழர்கள் சிலர் தான் உள்ளனர்.

    அவர்களை டெல்லியில் இருந்து இன்று சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. படிப்படியாக அங்குள்ள தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இலங்கை மக்கள் 30 பேரும் தத்தளித்து வருகின்றனர்
    • இந்தியா ஆதரவுக்கரம் நீட்ட முன் வந்துள்ளது.

    கொழும்பு:

    உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இலங்கை மக்கள் 30 பேரும் தத்தளித்து வருகின்றனர். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டுக்கொண்டு வருவதற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுகிறது. இதற்காக இந்தியாவை இலங்கை மனதார பாராட்டி உள்ளது.

    இதையொட்டி இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

    சூடானில் தவித்து வருகிற இலங்கை மக்களின் நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்களைப் பத்திரமாக மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் இந்தியா ஆதரவுக்கரம் நீட்ட முன் வந்துள்ளது. அதை நாங்கள் பாராட்டுகிறோம். அடுத்த சில நாட்களில் இது நடந்தேறும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சூடானில் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள் கொண்ட முதல் குழு ஜெட்டா வந்தடைந்தது.
    • தொடர்ந்து அங்கிருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3,000 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்தியர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மோதலில் ஈடுபட்டுள்ள சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவ படை இடையே தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு 72 மணி நேர போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.

    அந்த வகையில் சூடானில் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள் கொண்ட முதல் குழு, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் புறப்பட்டது. இந்தக் குழுவானது சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்திற்கு வந்தடைந்தது. சூடானில் உள்ள இந்தியர்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சூடானில் மீட்கப்பட்ட 121 இந்தியர்கள் கொண்ட இரண்டாவது குழு, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மூலம் புறப்பட்டது.

    • சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.
    • இந்தியர்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3000 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்தியர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மோதலில் ஈடுபட்டுள்ள சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவ படை இடையே தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு 72 மணி நேர போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.

    அவ்வகையில் சூடானில் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள் கொண்ட முதல் குழு, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் புறப்பட்டது. இந்தக் குழுவானது சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்திற்கு வருகிறது. மேலும், சூடானில் உள்ள இந்தியர்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    மீட்பு பணிகளை கவனிப்பதற்காக வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் ஜெட்டா சென்றுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூடானில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
    • தமிழர்கள் உள்பட இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.

    ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் மூண்டுள்ளது.

    ராணுவ ஆட்சி நடந்து வரும் அந்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கடும் சண்டை நடந்து வருகிறது.

    தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் விமான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால் சூடானில் இருந்து வெளிநாட்டினர் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    இந்தியர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் சூடானில் சிக்கி தவிக்கிறார்கள். தெருக்களில் துப்பாக்கி சண்டை நடப்பதால் வீடு, பணியாற்றும் இடங்களில் முடங்கி கிடக்கிறார்கள். சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

    ஆபரேசன் காவேரி என்ற பெயரில் மீட்கும் பணி தொடங்கப்பட்டு சூடானுக்கு கப்பலையும், சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு இரண்டு விமானங்களையும் அனுப்பி உள்ளது. சூடானில் 72 மணி நேர சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சூடானில் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்குள்ள தமிழர்கள், வாட்ஸ் அப் குருப் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அதில் தங்களது விவரங்கள், எந்த பகுதியில் இருக்கிறோம் என்ற தகவல்களை பகிர்ந்துள்ளனர். இதுவரை 84 தமிழர்கள் வாட்ஸ் அப்பில் தகவல்களை அனுப்பி உள்ளனர்.

    மின்சாரம் மற்றும் இணைய தள வசதி முடங்கி உள்ளதால் தகவல்களை பரிமாற்றத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் சூடானில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முடங்கி போய் இருப்பதால் இந்திய மீட்பு கப்பல் நிறுத்தப்பட்டுள்ள போர்ட் சூடான் துறைமுகத்துக்கு இந்தியர்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது. அவர்களை துறைமுகத்துக்கு கொண்டு வருவதற்கான வாகன வசதிகள் இல்லை.

    இதனால் தமிழர்கள் உள்பட இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து டைல்ஸ் நிறுவனத்துக்கு பணிக்கு சென்ற 28 பேர் தங்களை மீட்கும்படி வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் 17 பேர் தமிழர்கள் ஆவார்கள்.

    இதற்கிடையே போர்ட் சூடான் துறைமுகத்துக்கு 500 இந்தியர்கள் வந்துள்ளனர் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சுடானில் சிக்கித் தவிக்கின்றனர்.
    • இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது.

    வடகிழக்கு ஆப்பிரிக்க நாடு சூடான். ராணுவ ஆட்சி நடந்து வரும் இந்த நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் காரணமாக பெரும் கலவரம் மூண்டுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சு காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர்.

    உள்நாட்டு போரில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் உள்பட சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். உள்நாட்டு போர் காரணமாக இந்தியா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சுடானில் சிக்கித் தவிக்கின்றனர். சுடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது.

     

    இதைத் தொடர்ந்து சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் துவங்கியுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியர்களை மீட்கும் பணிக்கு 'ஆபரேஷன் காவேரி' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் சூடான் துறைமுகத்தில் சுமார் 500 இந்தியர்கள் வந்தடைந்துள்ளனர்.

    "சுடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் காவேரி திட்டம் துவங்கிவிட்டது. சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகம் வந்தடைந்தனர். மேலும் பலர் வரவுள்ளனர். அவர்களை இந்தியா அழைத்துவர நமது கப்பல்கள் மற்றும் விமானம் தயார் நிலையில் உள்ளது. சூடானில் சிக்கித் தவிக்கும் அனைத்து சகோதர சகோதரிகளையும் மீட்போம்," என்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ×