search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srilanka blast"

    இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜே.எம்.ஐ. அமைப்புகளுக்கு தடை விதித்தார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா. #SriLankaAttacks #MaithripalaSirisena #banstwogroups
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஞாயிறன்று கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

    இதைத்தொடர்ந்து இலங்கை ராணுவமும், போலீஸ் படைகளும் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



    இந்நிலையில், இலங்கையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தையடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளும் தடை செய்யப்படுவதாக அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவித்தார். அந்த அமைப்புகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் முடக்கப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. #SriLankaAttacks #MaithripalaSirisena #banstwogroups 
    இலங்கையில் அதிரடிப்படை நடத்திய தேடுதல் வேட்டையில் வெடிகுண்டு மூலப்பொருள்கள் வைத்திருந்த 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #SrilankaBlast
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில் 300க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 
     
    தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு
    களுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு வாகன சோதனை, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, இலங்கையின் கொழும்பு கடற்கரை முகத்துவாரம் பகுதியில் அதிரடிப்படை நேற்று நடத்திய சோதனையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 3 பேரை கைது செய்தனர்.

    இந்நிலையில், இலங்கையின் அம்பாறை சம்மாந்துறை பகுதியில் டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடிகுண்டு மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை பதுக்கி வைத்திருந்த 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மேலும், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டின் அருகில் தற்கொலைப்படை அங்கிகள் இரண்டையும் பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #SrilankaBlast
    இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவை ஏற்று, பாதுகாப்பு துறை செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்தார். #SrilankaBlast #ColomboBlast
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில்  359 பேர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 



    இதற்கிடையே, பாதுகாப்பு குறைபாடுகளை காரணம் காட்டி பாதுகாப்பு செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டு இருந்தார்.

    இந்நிலையில், இலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு துறை செயலாளராக இருந்த ஹேமசிரி பெர்னாண்டோ தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பி வைத்தார். #SrilankaBlast #ColomboBlast
    இலங்கையில் அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர். #SrilankaBlast
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில்  359 பேர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 
     
    தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு வாகன சோதனை, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டறியப்பட்டது.

    இந்நிலையில், இலங்கையின் கொழும்பு கடற்கரை முகத்துவாரம் பகுதியில் அதிரடிப்படையினர் இன்று சோதனை நடத்தினர்.

    இதில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை ஆகியோர் மேற்கொண்ட சோதனையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள் மற்றும் 6 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், இலங்கையின் நுவரெலியா நகரில் நடந்த சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன என காவல்துறை தெரிவித்துள்ளது. #SrilankaBlast
    அமைதி திரும்பிய இலங்கை மண்ணில் 10 ஆண்டுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு அந்நாட்டை நிலைகுலைய செய்துள்ளது. #SriLankablasts #SriLankaEasterattacks
    சென்னை:

    இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்த மோதல் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. தனி நாடு கேட்டு இலங்கையில் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பை உலக நாடுகளின் ஆதரவோடு இலங்கை அரசு வீழ்த்தியது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதி கட்ட போரில் கொல்லப்பட்டு விட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது.

    இதன் பின்னர் இலங்கையில் அமைதி நிலவி வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையில் மிகப் பெரிய அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் இலங்கை அரசும் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தது. விடுதலைப்புலிகளின் அமைப்பு முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட்டு விட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இது சமீப காலமாக கொஞ்சம் தளர்த்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் இலங்கையில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொடூர குண்டுவெடிப்பு சம்பவத்தில் புதிய தீவிரவாத அமைப்பு ஒன்று ஈடுபட்டுள்ளது. இது இலங்கையை மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் கூடுதல் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

    அதே நேரத்தில் இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பின்னர் அமைதியாக வாழ்ந்து வந்த சிங்கள மக்களின் தூக்கம் தொலைந்துள்ளது. புதிய தீவிரவாத இயக்கம் தங்களது முதல் தாக்குதலிலேயே இலங்கையை நிலைகுலைய செய்துள்ளது.

    இது அந்த நாட்டின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கருதப்படுகிறது. இதன் மூலம் இலங்கைக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து அந்நாடு எப்படி மீளப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. #SriLankablasts #SriLankaEasterattacks

    இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #Srilankablast
    சென்னை:

    சென்னையில் நேற்று மாலையில் இருந்தே சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    எழும்பூர், அண்ணாநகர், அயனாவரம், புரசைவாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் முன்பும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    நுங்கம்பாக்கக்தில் உள்ள இலங்கை தூதரகம், ஏர்லைன்ஸ் அலுவலகம் ஆகியவற்றில் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்த இரண்டு இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் கலியன் மேற்பார்வையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    எழும்பூரில் உள்ள புத்தமட அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #Srilankablast
    ×