என் மலர்
நீங்கள் தேடியது "தேசிய மாநாடு கட்சி தலைவர்"
- ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
- ஜம்மு காஷ்மீரில் பாஜக 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்கப்பதிவு நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டன. அதில், பெரும்பான்மை இடங்களை பிடித்து தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.
தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 29 இடங்களிலும் பிற கட்சிகள் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
தேசிய மாநாடு கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பியாரே லால் சர்மா, சதீஷ் ஷர்மா, சௌத்ரி முகமது அக்ரம் மற்றும் டாக்டர் ராமேஷ்வர் சிங் ஆகிய 4 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் தேசிய மாநாட்டு கட்சியின் பலம் 46 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் தனியாக ஆட்சி அமைக்க தேவையான சட்டமன்ற உறுப்பினர்களை தேசிய மாநாட்டு கட்சி பெற்றுள்ளது.