4 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு.. தனிப்பெரும்பான்மை பெற்றது தேசிய மாநாட்டு கட்சி

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.ஜம்மு காஷ்மீரில் பாஜக 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
National Conference,  Congress ,
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்கப்பதிவு நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டன. அதில், பெரும்பான்மை இடங்களை பிடித்து தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.

தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 29 இடங்களிலும் பிற கட்சிகள் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

தேசிய மாநாடு கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பியாரே லால் சர்மா, சதீஷ் ஷர்மா, சௌத்ரி முகமது அக்ரம் மற்றும் டாக்டர் ராமேஷ்வர் சிங் ஆகிய 4 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் தேசிய மாநாட்டு கட்சியின் பலம் 46 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் தனியாக ஆட்சி அமைக்க தேவையான சட்டமன்ற உறுப்பினர்களை தேசிய மாநாட்டு கட்சி பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com