என் மலர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் வான்வழி"
- டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது.
- ஆலங்கட்டி மழையில் சிக்கி குலுங்கிய அந்த விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட 220-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடுவானில் பறந்தபோது பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கி அந்த விமானம் குலுங்கியது. இருப்பினும் அந்த விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதற்கிடையே நடுவானில் அந்த விமானம் அவசர நிலையில் சிக்கித் தவித்தபோது, நிலைமையை சமாளிப்பதற்காக விமானி பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்வதற்கு லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு அனுமதி கோரினார். ஆனால் அவசரகால பயன்பாட்டுக்கும் அந்நாட்டு வான்வெளியை பயன்படுத்த லாகூர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி மறுத்துவிட்டது.
அதன்பின் விமானி மோசமான வானிலைக்கு மத்தியிலும் வழக்கமான வான்வழியிலேயே விமானத்தை பத்திரமாக இயக்கிச் சென்று தரையிறக்கியது தற்போது தெரிய வந்துள்ளது.
- வரும் வழியில் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்தியதாக தகவல்.
- பாகிஸ்தான் வான்வழியில் சுமார் 46 நிமிடங்கள் பறந்ததாக தெரிவித்தது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் போலாந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இரு நாடுகளுக்கு அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி வரும் வழியில் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த செய்தி நிறுவனம் இதனை தெரிவித்து இருக்கிறது. எனினும், இது குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியில் சுமார் 46 நிமிடங்கள் பறந்ததாக தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியில் காலை 10.15 மணிக்கு நுழைந்து காலை 11.01 மணிக்கு வெளியேறியது. சித்ரல் வழியே பாகிஸ்தானில் நுழைந்த விமானம் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் வழியே அம்ரித்சர் வந்துள்ளது.






