என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்ரகாம் லிங்கன்"

    • அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்து உள்ளது.
    • ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் ஆபிரகாம் லிங்கன் அருகில்கூட வரவில்லை.

    ஈரான் மீதான போரில் அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க் கப்பலான யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

    ஓமன் கடற்பரப்பில் இருந்த ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், இயங்க முடியாத வகையில் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

    ஆனால் அதை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்தது. ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலின் புகைப்படத்தை வெளியிட்டு, 'ஆபரேஷன் எபிக் ப்யூரி ராணுவ நடவடிக்கைக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்து உள்ளது.

    மேலும், ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் ஆபிரகாம் லிங்கன் அருகில்கூட வரவில்லை என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

    • ஆபிரகாமின் 6 அடி உயர மெழுகு சிலையின் தலைபகுதி உருகி கீழே வளைந்துள்ளது.
    • சிலையின் சேதமடைந்த தலைப்பகுதி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் உட்பட பல நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவிலும் வெப்ப அலை தொடர்கிறது. வெப்ப அலையின் தாக்கம் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது மெழுகால் செய்யப்பட்ட சிலைகளிலும் காணப்படுகிறது.

    அமெரிக்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியுள்ளது. ஆபிரகாமின் 6 அடி உயர மெழுகு சிலையின் தலைபகுதி உருகி கீழே வளைந்துள்ளது. இந்த திறந்தவெளி மெழுகு சிலையின் சேதமடைந்த தலைப்பகுதி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.


    அமெரிக்காவின் 16-வது குடியரசு தலைவர் ஆபிரகாம் லிங்கன். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860-ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார். அவரை பெருமைப்படுத்தும் வகையில் வாஷிங்டனில் தொடக்கப்பள்ளி வளாகத்தில் 6-அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை வடிவகைப்பட்டு இருந்தது.

    ×