என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரை செந்தில் குமார் raghava Lawence"

    லெஜெண்ட் சரவணன் நடிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

    தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்தை, பாராட்டுகளை குவித்த 'கருடன்' திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார். 'காக்கி சட்டை', 'கொடி', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

    புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார்.

    ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார்.

    இப்படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கம் துரைராஜ், நிர்வாக தயாரிப்பு அம்பிகாபதி, உடைகள் வடிவமைப்பு தீப்தி, புகைப்படங்கள் சுரேஷ், போஸ்டர் வடிவமைப்பு தினேஷ், சண்டை காட்சிகள் மேத்யூ மகேஷ் உள்ளிட்டோர் பணியாற்றியுள்ளனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக லெஜெண்ட் சரவணன் இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதற்கிடையே, லெஜெண்ட் சரவணன் தனது படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், மாற்று திறமைசாலிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதுகுறித்தும் லெஜெண்ட் சரவணன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில்," மாற்று திறமைசாலிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தருணம்" என்று குறிப்பிட்டிருந்தார். மாற்றுத்திறனாளிகளை மாற்றுத்திறமைசாளிகள் என்று குறிப்பிட்ட லெஜெண்ட் சரவணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    • ஹண்டர் படத்தை வெங்கட் மோகன் இயக்கவுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
    • அதிகாரம் படத்தின் கதை வெற்றிமாரன் எழுதியுள்ளார்.

    ராகவா லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளியான 'பார்த்தாலே பரவசம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு முன் பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் இருந்துள்ளார்.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் நடித்தார். லாரன்ஸுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் சஞ்சனா நட்ராஜன் நடித்திருப்பர். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 'பென்ஸ்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 2 ஆம் படம் இது.

    அதையடுத்து ராகவா லாரன்சின் 25-வது திரைப்படமாக 'ஹண்டர்' படத்தில் நடிக்கவுள்ளார். ஹண்டர் படத்தை வெங்கட் மோகன் இயக்கவுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

    இதற்கு முன் விஷால் நடிப்பில் வெளிவந்த அயோக்யா படத்தை இவர் இயக்கியுள்ளார். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் உடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அடுத்ததாக அறிமுக இயக்குனரான துரை செந்தில் குமார் இயக்கத்தில் அதிகாரம் படத்தில் நடிக்கவுள்ளார். அதிகாரம் படத்தின் கதை வெற்றிமாரன் எழுதியுள்ளார். இப்படம் 2 வருடங்களுக்கு முன் ஆரம்பித்து படப்பிடிப்பு பணிகள் பாதியிலேயே நிற்கப்பட்டது. இப்பொழுது மீண்டும் இப்படத்தை எடுக்கவுள்ளனர். கதிரேசன் மற்றும் வெற்றிமாறன் இப்படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

    இதுக்குறித்து ராகவா லாரன்ஸ் அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் வணக்கம் நண்பர்களே மற்றும் ரசிகர்களே, வெற்றி மாறன் சார், அதிகாரத்தின் படப்பிடிப்பு ஸ்கிரிப்டைப் பற்றி கூறியதைக் கேட்டு நான் மிரண்டுவிட்டேன், மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. வெற்றி மாறன் சார் எழுதிய ஒரு பிரமாண்டமான படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். நான் முன்பு அறிவித்த இரண்டு படங்களுக்கு பிறகு இந்த படத்தில் வேலை செய்ய நான் காத்திருக்கிறேன். இந்த அற்புதமான திரைக்கதையை எனக்கு வழங்கிய வெற்றி மாறன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள், இது காத்திருப்புக்கு மதிப்பானது மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஐயா இதை நடந்ததற்கு. உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு வேண்டும். என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×