என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் கைது"

    • காரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் மற்றும் பீர்பாட்டில்கள் ஏராளமாக இருந்தன.
    • மதுபானம் தேவைப்படுபவர்களுக்கு, தேவையான மது வகைகளை தனது காரில் எடுத்துச் சென்று சப்ளை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருரங்காடி பகுதியை சேர்ந்தவர் அல்கு என்கிற ஷெபிக். இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். "ஆட்டோர்ஷா" என்ற மலையாள படத்தில் அறிமுகமான இவர், "ஆக்ஷன் ஹீரோ பிஜூ" என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடத்திருக்கிறார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் அவர் தனது காரில் எர்ணாகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கலால் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் நடிகர் ஷெபிக் காரிலும் சோதனை செய்தனர்.

    அப்போது அவரது காரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் மற்றும் பீர்பாட்டில்கள் ஏராளமாக இருந்தன. அதனை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது, கலால் துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நடிகர் ஷெபிக்கை கலால் அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவரது காரில் இருந்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் 52 லிட்டர் மற்றும் 58 பாட்டில் பீர் (37.7 லிட்டர்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து சிறிய வேடங்களில் நடித்து வந்த நடிகர் ஷாபிக், இரவு நேரத்தில் மதுபான விற்பனையில் ரகசியமாக ஈடுபட்டு வந்திருக்கிறார். அவர் மதுபானம் தேவைப்படுபவர்களுக்கு, தேவையான மது வகைகளை தனது காரில் எடுத்துச் சென்று சப்ளை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அவ்வாறு மதுபானங்களை விற்பனை செய்வதற்கு எர்ணாகுளம் சென்ற போது தான், கலால் துறையினரின் சோதனையில் சிக்கிக்கொண்டார். 

    • நீதிபதியின் மகனை தாக்கிய புகாரில் பிக்பாஸ் தர்ஷன் மற்றும் லோகேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • நடிகர் தர்ஷன் மற்றும் லோகேஷ் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை முகப்பேர் கிழக்கில் கார் நிறுத்தியது தொடர்பான தகராறில் நீதிபதி மகன், பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில், நீதிபதியின் மகனுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், கார் பார்க்கிங் தகராறில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நீதிபதியின் மகனை தாக்கிய புகாரில் பிக்பாஸ் தர்ஷன் மற்றும் லோகேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

    நடிகர் தர்ஷன் மற்றும் லோகேஷ் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், தர்ஷன் கொடுத்த புகாரின் பேரில் நீதிபதியின் மகன், மனைவி மற்றும் மாமியார் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் இருதரப்பினரிடையே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர்.
    • பண மோசடி வழக்கில் நடிகர் கைது செய்யப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் கலாபவன் சோபி ஜார்ஜ்(வயது56). மலையாள பட இயக்குனர் மற்றும் நடிகரான இவர், தனது குடும்பத்தினருடன் கொல்லம் சாத்தன்னூர் நெல்லிமடம் காக்கநாடு பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் புல்ப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் சுவிட்சர்லாந்தில் வேலை வாங்கிக்தருவதாக கூறி கடந்த 2021-2022 ஆண்டுகளில் சோபி ஜார்ஜ் ரூ.3லட்சம் பணத்தை பல்வேறு தவணைகளாக வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கூறியபடி பணம் கொடுத்த நபருக்கு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை என தெரிகிறது.

    ஆகவே அந்த நபர் தன்னிடம் பணம் மோசடி செய்து விட்டதாக சுல்தான்பத்தேரி போலீஸ் நிலையத்தில் சோபி ஜார்ஜ் மீது புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய போலீசார், சோபி ஜார்ஜை கைது செய்தனர்.

    வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவரது விலையுயர்ந்த சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சோபி ஜார்ஜ் இது போன்று வயநாடு பகுதியை சேர்ந்த ஏராளமானோரிடம் வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.25லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது வயநாட்டில் 6 வழக்குகள் உள்பட 26 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    மோசடி புகார் தொடர்பாக சோபி ஜார்ஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பண மோசடி வழக்கில் நடிகர் கைது செய்யப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×