search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வேலை வாங்கித்தருவதாக பண மோசடி- மலையாள நடிகர் கைது
    X

    வேலை வாங்கித்தருவதாக பண மோசடி- மலையாள நடிகர் கைது

    • வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர்.
    • பண மோசடி வழக்கில் நடிகர் கைது செய்யப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் கலாபவன் சோபி ஜார்ஜ்(வயது56). மலையாள பட இயக்குனர் மற்றும் நடிகரான இவர், தனது குடும்பத்தினருடன் கொல்லம் சாத்தன்னூர் நெல்லிமடம் காக்கநாடு பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் புல்ப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் சுவிட்சர்லாந்தில் வேலை வாங்கிக்தருவதாக கூறி கடந்த 2021-2022 ஆண்டுகளில் சோபி ஜார்ஜ் ரூ.3லட்சம் பணத்தை பல்வேறு தவணைகளாக வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கூறியபடி பணம் கொடுத்த நபருக்கு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை என தெரிகிறது.

    ஆகவே அந்த நபர் தன்னிடம் பணம் மோசடி செய்து விட்டதாக சுல்தான்பத்தேரி போலீஸ் நிலையத்தில் சோபி ஜார்ஜ் மீது புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய போலீசார், சோபி ஜார்ஜை கைது செய்தனர்.

    வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவரது விலையுயர்ந்த சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சோபி ஜார்ஜ் இது போன்று வயநாடு பகுதியை சேர்ந்த ஏராளமானோரிடம் வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.25லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது வயநாட்டில் 6 வழக்குகள் உள்பட 26 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    மோசடி புகார் தொடர்பாக சோபி ஜார்ஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பண மோசடி வழக்கில் நடிகர் கைது செய்யப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×