என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துணவு அமைப்பாளர்கள்"

    • கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
    • குடும்ப ஓய்வூதியமாக ரூ.1,200 சிறப்பு ஓய்வூதியம் பெறும் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1,100 ஓய்வூதியம் வழங்கப்படும்.

    தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

    * ரூ.1088 கோடி மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.

    * அங்கன்வாடி உதவியாளர், சமையலர், உதவியாளர், தூய்மை பணியாளருக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்த்தப்படும்.

    * அங்கன்வாடி ஊழியர், ஊராட்சி செயலாளர்கள் ஓய்வூதியத்தொகை ரூ.2,000-ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    * பணி நிறைவு பெறும் நாளில் தரப்படும் ஒட்டுமொத்தத்தொகை ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

    * குடும்ப ஓய்வூதியமாக ரூ.1,200 சிறப்பு ஓய்வூதியம் பெறும் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1,100 ஓய்வூதியம் வழங்கப்படும்.

    * முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்டவை கோரி விண்ணப்பிதித 80,000 பேருக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படும்.

    * உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பம் அளித்தவர்களில் தேர்வு செய்யப்பட்ட 80,000 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வுத்தொகை வழங்கப்படும் என்று கூறினார்.

    • சத்துணவுப் பணியாளர்களின் ஓய்வுக்காலத்தை நிம்மதியானதாக மாற்ற வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உதவித் தொகையாக தனியாக மாதம் ரூ.3000 வழங்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.2000 மட்டுமே ஓய்வு ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று நான் சென்றிருந்தேன். பெரியவர் நாகராஜன், 37 ஆண்டுகளாக சத்துணவு அமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இப்போது ஓய்வு பெற்றுள்ள அவருக்கு ஓய்வூதியமாக ரூ.2000 மட்டும் தான் வழங்கப்படுகிறது. '' நான் 60 வயதைக் கடந்த மாற்றுத்திறனாளி. பல நோய்களுக்கு மருத்துவம் பெற வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் தமிழக அரசு வழங்கும் 2000 ரூபாயை வைத்துக் கொண்டு குடும்பச் செலவுகளை கவனிப்பேனா? மருத்துவச் செலவுகளை சமாளிப்பேனா? அல்லது பிற கடமைகளை நிறைவேற்றுவேனா?'' என்று கேட்டார். அவரது வினாவுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை.

    தமிழ்நாட்டில் முதியோர் உதவித் தொகையாக மாதம் ரூ.1,200, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதை அதிகம் என்று கூறவில்லை. இந்தத் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். ஆனால், 40 ஆண்டுகள் பணியாற்றிய சத்துணவு அமைப்பாளர்களுக்கும் கிட்டத்தட்ட அதே அளவு தொகை தான் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது எந்த வகையில் நியாயம் ஆகும்? என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு.

    சத்துணவு அமைப்பாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 நிர்ணயிக்கப்பட வேண்டும். அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உதவித் தொகையாக தனியாக மாதம் ரூ.3000 வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் சத்துணவுப் பணியாளர்களின் ஓய்வுக்காலத்தை நிம்மதியானதாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×