என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருது சகோதரர்கள்"

    • தலைசிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்!
    • இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர்நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சிவகங்கைச் சீமையின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இம்மண்ணில் நிலைத்திருக்கும் மருது சகோதரர்கள் நினைவு நாள்.

    ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடும் உணர்வை அந்நாளிலேயே விதைத்து, தலைசிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்! இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர்நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம்! என்று கூறியுள்ளார். 



    • மருது சகோதரர்களின் 222-வது நினைவுதினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்படும்.
    • சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை இந்திய மண்ணில் இருந்து அகற்ற வேண்டும் என்று போராடி வீர மரணம் அடைந்த மருது சகோதரர்களின் 222-வது நினைவுதினத்தையொட்டி 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்படும்.

    நிர்வாகிகள், மருது அழகுராஜா, அசோகன், தர்மர் எம்.பி., கோபி கிருஷ்ணன், ஐயப்பன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்துவார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கு மு.க. ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
    • சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையினை மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.

    சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்கள் சிலைக்கு நாளை அடிக்கல் நாட்ட உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழினத்தின் வீரமரபின் அடையாளம், மண் விடுதலைக்கான முதல் முகவரி மாமன்னர்கள் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் 22.01.2025 புதன் அன்று அடிக்கல் நாட்டுகிறார்.

    ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமையப்பெறும் திருவுருவச் சிலைகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு மட்டுமல்லாமல், ரூ.50 இலட்சம் செலவில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையினைத் திறந்துவைக்கிறார்.

    சிவகங்கைச் சீமையின் பெருமைக்கு மேலும் வலுசேர்க்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது மனமார்ந்து நன்றியை நான் சார்ந்த முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் மனமார தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    ×