என் மலர்
நீங்கள் தேடியது "துர்கா"
- தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது.
- பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாக தீப வழிபாடு செய்யலாம்.
தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 சக்திகளும் உள்ளனர்.
தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது.
அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.
மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.
தினமும் மாலையில் தீபம் வைத்து வணங்கி பூஜை செய்ய வேண்டும்.
பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாக தீப வழிபாடு செய்யலாம்.
வீட்டிலே சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, மணி நேரமாவது எரிவதற்கு எண்ணெய் விட்டு,
தேவியை மனதில் தியானித்துப் பூஜை செய்ய வேண்டும்.
அப்படி செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி
எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுபாக்கியங்களும் ஏற்படும்.
வீட்டிலே நாம் இம்மாதிரி தீப பூஜை செய்யும்போது, பக்கத்திலேயே குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய வேண்டும்.
அவர்களையும் நல்ல சுலோகங்களை பாடல்களைப் படிக்க வைத்து பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.
தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும் வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும்.
லட்சுமியின் அருள் கிடைக்கும்.
- ஆதி பராசக்தியை துர்க்கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.
- தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப் பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.
கல்வி, இசை, புகழ், செல்வம் தானியம், வெற்றி, பூமி, தண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள்.
ஆதி பராசக்தியை துர்க்கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.
லட்சுமி வடிவில் தரிசித்தால் செல்வம் பெருகும்.
சரஸ்வதியாக எண்ணி வணங்கினால் கல்விச்செல்வம் சிறக்கும்.
பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும்.
எனவேதான் இந்நாட்களில் கொலுவும் வைக்கிறார்கள்.
தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப் பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.
இதற்கு காரணம், தேவியால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்காக,
பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகிய மும்மூர்த்திகளும் உருத்திரன், சதாசிவன் ஆகிய சிவனின் மற்ற வடிவங்களும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய சக்திகளுக்குள் அடக்கமாக உள்ளனர்.
எனவே, சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.