என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண யோகம்"

    • 27 நட்சத்திரங்களை தன் மனைவிகளாகக் கொண்டவன் சந்திரன்.
    • மதுரையைப் போலவே இங்கும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ளது, ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயம். சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று வகையிலும் பெருமை உடையதாக உள்ளது. சந்திரன் வழிபட்டு சிவன் அருள் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இக்கோவிலில் மூலவராக சோமேஸ்வரர், உற்சவராக சோமநாதர் ஆகியோர் உள்ளனர். அம்பாள் ஆனந்தவல்லி தாயார். புராண காலத்தில் இந்த ஊர் 'சந்திர பட்டணம்' என்று வழங்கப்பட்டு உள்ளது.

    27 நட்சத்திரங்களை தன் மனைவிகளாகக் கொண்டவன் சந்திரன். அந்த மனைவிகளில் ரோகிணி, கார்த்திகை ஆகிய இருவர் மீது மட்டும் மிகுதியான அன்பு கொண்டவனாக இருந்தான். இதைக்கண்டு கோபமுற்ற அவனது மற்ற மனைவிகள் இதுபற்றி தம் தந்தையான தட்சனிடம் முறையிட்டனர். இதைக் கேட்டு சினமடைந்த தட்சன், சந்திரனுக்குச் சாபம் கொடுத்தான். இதன் காரணமாக வெப்பு நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், பொலிவிழந்து தேயத் தொடங்கினான். தனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி வருந்திய சந்திரன், தன் சாபத்துக்கு விமோசனம் என்னவென்று அகத்தியரிடம் கேட்டான். அதற்கு அவர், 'வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள வில்வ வனத்தில் உள்ள லிங்கத்தை கோவில் கட்டி வணங்கினால் இந்தப்பிணி நீங்கும்' என்று கூறினார்.

    அதன்படியே சந்திரனும் செய்து தன் பிணியை நீக்கிக்கொண்டான். மேலும் சந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமான் தன் திருமுடியில் சந்திரனுக்கு இடம் தந்ததாக கோவில் தல வரலாறு தெரிவிக்கிறது. சந்திரன் தன்னுடைய கலைகளால் அபிஷேகம் செய்ததால் இங்குள்ள சுயம்பு லிங்கம் வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறது. இத்தலத்தில் சந்திர பகவான், தம் இரு மனைவியரான ரோகிணி, கார்த்திகை ஆகிய இருவருடன் ஒரே கல்லில் சிற்பமாக தனிச் சன்னிதியில் காட்சியளிப்பது இக்கோவிலின் தனிச் சிறப்பு.

    மதுரையில் ஆட்சி செய்த நாயக்க வம்சத்திற்குப் பிறகு, வேற்று மதத்தினர் மதுரையம்பதியைக் கைப்பற்ற முனைந்தனர். அப்போது, சிவகங்கை மன்னர் சசிவர்ணரும், சேது காவலரும் இதை எப்படியாவது முறியடிக்க வேண்டுமென முடிவெடுத்தனர். வீரத்திற்கு இலக்கணம் வகுத்த தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரன் தலைமையில் சேது சேனையும், விவேகத்தில் சிறந்த தாண்டவராயப் பிள்ளை தலைமையில் சிவகங்கை மறவர் படையும் வீறு கொண்டு எழுந்தன. அவர்கள் ஆலவாய் அண்ணலையும், அங்கயற்கண்ணியையும் தக்க பாதுகாப்புடன் மானாமதுரைக்குக் கொண்டு வந்து சோமநாதர் கோவிலில் பாதுகாப்பாக வைத்ததாக சொல்லப்படுகிறது. மீனாட்சியும், சொக்கநாதரும் இரண்டு ஆண்டுகள் இவ்வாலயத்தில் வீற்றிருந்து பின்னர் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சரித்திரச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

     

    இத்தலத்தில் பல சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிவபெருமான் தனது திருவிளையாடலின் போது தமது அடியார் மாணிக்கவாசகருக்காக இத்தலத்தில்தான் நரிகளைப் பரிகளாக மாற்றிட, கயிறு மாற்றிக்கொடுத்தார். ராமர், அகத்தியரின் ஆலோசனைப்படி இங்கு வந்து இறைவனைப் பூஜித்து, அதன் பின்பு சேது பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்றார். ராமன், ராவணனுடன் போர் புரிந்த போது வானரச் சேனைகளின் பசியை போக்கிய தலம். பலராமர் தனது தீர்த்த யாத்திரையின் போது சூரனைக் கொன்றதால் பாவம் ஏற்பட்டது. அதன்பின் இத்தலத்திற்கு வந்து வில்வ வனத்தில் இருந்த லிங்கத்தினைப் பூஜித்து பாவவிமோசனம் பெற்று பின் துவாரகையை மீட்டார்.

    ஐந்து நிலை கோபுரத்துடன் இக்கோவில் அமைந்துள்ளது. இந்த ராஜகோபுரத்தில் இத்தலத்தில் நிகழ்ந்த அற்புதங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது என்பது இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும். இக்கோவிலில் சோமநாத சுவாமி, ஆனந்தவல்லி அம்மன் சன்னிதிகளுடன், விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சதாசிவ பிரம்மேந்திரர் உபசன்னிதிகளும் உள்ளன. இங்குக் கோவில் தேர், கோவில் கல்வெட்டு போன்றவை உள்ளன. கோவிலின் தல விருட்சமாக வில்வ மரமும், தல தீர்த்தமாக சந்திர புஷ்கரணியும் உள்ளன. காரண ஆகமப்படி கோவிலில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    மதுரையைப் போலவே இங்கும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் என்றால், இங்கு ஆனந்தவல்லி சோமநாதராகக் காட்சியளிக்கிறார். மதுரையில் கள்ளழகர் என்றால், மானாமதுரையில் காட்சி தருபவர் வீர அழகர். மதுரையம்பதியில் மீனாட்சி சொக்கநாதருக்கு நடக்கும் திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், திரி எடுத்து சாமியாடுவது, பீச்சாங்குழல் சேவை என அனைத்தும் இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

    இக்கோவிலில் காரண ஆகம முறைப்படி நான்கு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு சித்திரை திருவிழா, ஆடி திருவிழா, சித்திரை தேரோட்டம், மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா விமரிசையாக நடைபெறும்.

    இங்கிருக்கும் சந்திர புஷ்கரணியில் நீராடி இறைவனை மனமுருகி வழிபட்டால் தீராத சரும நோய்கள் குணமாகும் என்று சொல்லப்படுகிறது. இங்கு, ஆடித் தபசு திருநாளில் சுவாமிக்கு அணிவித்த மாலைகளை அணிந்து கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்வித்தால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    கோவில் தினமும் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் பக்தர் வழிபடுவதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் பிரதான சாலையில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மானாமதுரை சோமநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

    • குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.
    • 21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும்.

    நாகை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரணேஸ்வரர் ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் 11வது தலமாகும்.

    காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது.

    21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும்.

    இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.

    பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.

    குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.

    மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.

    பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.

    இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.

    மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

    • நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.
    • பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள்.

    காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு.

    இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று.

    நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.

    51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.

    சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.

    இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.

    இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவியாக பிரம்ம வித்யாம்பிகை திகழ்கிறார்.

    திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள்.

    மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார்.

    பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள்.

    கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு.

    நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ (செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணி செய்வதைக் காணலாம்.

    கீழ்க்கரம் அபய கரம். இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும். பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.

    பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.

    • ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது.
    • சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.

    நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர்.

    இவருக்கு திருவெண்காடு பிரம வித்யாம்பிகை தலத்தில் தனி சன்னதி உள்ளது.

    புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.

    ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது.

    அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும்.

    இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.

    புதன் தலமான திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர சிவபெருமானுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.

    எல்லாவிதமான துன்பங்களையும் அழிக்கும் சக்திகொண்டது இந்த அகோர பூஜை.

    நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர்.

    இவருக்கு திருவெண்காடு பிரம வித்யாம்பிகை தலத்தில் தனி சன்னதி உள்ளது.

    புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.

    ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது.

    அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும்.

    இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.

    புதன் தலமான திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர சிவபெருமானுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.

    எல்லாவிதமான துன்பங்களையும் அழிக்கும் சக்திகொண்டது இந்த அகோர பூஜை.

    • சுக்கிரக் கிரகம் களத்திரகாரகன் என்றழைக்கப்படும் கிரகம் ஆகும்.
    • ஒருவரது திருமண வாழ்வை நிர்ணயிக்கும் கிரகமாகச் சுக்கிரன் திகழ்கிறது.

    சுக்கிரக் கிரகம் களத்திரகாரகன் என்றழைக்கப்படும் கிரகம் ஆகும்.

    ஒருவரது திருமண வாழ்வை நிர்ணயிக்கும் கிரகமாகச் சுக்கிரன் திகழ்கிறது.

    சூரியனார்கோயிலில் சூரியனுக்கு வடக்கில் தெற்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் காணப்பெறும் சுக்கிர பகவான் வலது கையால் அபய முத்திரையினையும் இடது கையைத் துடையில் ஊன்றியவாறும் காட்சி அளிக்கின்றார்.

    சுக்கிர பகவானுக்கு அசுரகுரு, உஷனன், ஒள்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சிதன், சுக்கிரன், சுங்கன், சைக்கியன், திங்கள், தைத்யமந்திரி, பளிங்கு, பார்க்கவன், பிரசுரன், பிருகு, புகர், புயல், மழைக்கோள் என்றும் வேறு பெயர்கள் உண்டு.

    ரிஷபம், துலாம் ராசிகளுக்கு அதிபதியான இவருக்குரிய அதிதேவதை இந்திராணி, வாகனம் முதலை, தானியம் மொச்சை, வெண்தாமரை, வெள்ளைநிற ஆடை, வைரம், மொச்சைப் பொடி அன்னம், அத்தி சமித்து, வெள்ளி, உலோகம் ஆகியன இவருக்கு உரியன ஆகும். 

    ×