என் மலர்
நீங்கள் தேடியது "மாவீரன் அழகு முத்துக்கோன்"
- மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- முதலமைச்சரை தொடர்ந்து அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவில் முதன் முதலில் போரிட்ட மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
- மாவீரன் அழகு முத்துக்கோனின் 266-வது குருபூஜையை முன்னிட்டு 11-ந்தேதி எழும்பூரில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆங்கிலேய அரசாங்கத்திற்கு வரி தர மறுத்து போர்க்களத்தில் உயிர் நீத்தவரும், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு வித்திட்டவரும், வாள்வீச்சு, காளை அடக்குதல், மல்யுத்தம் போன்றவற்றில் கைதேர்ந்தவருமான சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் அழகு முத்துக்கோனின் 266-வது குருபூஜையை முன்னிட்டு 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.45 மணியளவில் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அனைவரும் திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினோம்.
- மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு தபால் தலை வெளியிட்டுப் புகழ் சேர்த்தது பெருமைக்குரியது.
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் 314-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
தேச விடுதலைக்காக, இறுதிவரை துணிச்சலுடன் போராடி, தன்னுயிரையே தியாகம் செய்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்கள் பிறந்த தினம் இன்று.
சென்னை எழும்பூரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு, தமிழக பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று, மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினோம்.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2015 ஆம் ஆண்டு, மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு தபால் தலை வெளியிட்டுப் புகழ் சேர்த்தது பெருமைக்குரியது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில், இறுதிவரை பின்வாங்காமல், அச்சமின்றிப் போரிட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் என்று கூறியுள்ளார்.






