என் மலர்
நீங்கள் தேடியது "ஹெச்.ராஜா"
- விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டிளித்தார்.
- சீமான் தமிழ் தேசியத்தை கை விட்டால் பா.ஜ.க.வுடன் நெருங்கி வரலாம்.
சிவகங்கை
சிவகங்கையில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி நடந்தது. இதனை பா.ஜ.க முன்னாள் தேசிய செயலா ளரும், மூத்த தலைவருமான எச்.ராஜா தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் குடிமகனாக உள்ள எவரும் அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். சினிமா பாப்புலாரிட்டி மட்டுமே அரசியலுக்கு உதவாது என்ற திருமா வளவனின் கருத்தை ஏற்று கொள்கிறேன்.
2016-ல் மோடி ஆட்சி அமையவில்லை என்றால் பிச்சைக்கார நாடாக இந்தியா மாறியிருக்கும். மெட்ரோ ெரயில் பணிக்கு தகுதி இருந்தும் ஒப்பந்தம் கிடைக்காதவர்களே சி.பி.ஐக்கு புகார் செய்தனர். 6-வது நபராகவே அண்ணா மலை புகார் அளித்துள்ளார்.அதில் மு.க.ஸ்டாலினை விசாரிக்க வாய்ப்புள்ளது.
நெல்லை எம்.பி ஞான திரவியத்திடம் திமுக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது என்பது தி.மு.க.வின் கண்துடைப்பு நாடகம். மணிப்பூர் கலவரம் என்பது நீண்ட நாட்களாக நடந்து வரும் பிரச்சினை.விரைவில் முடிவுக்கு வரும்.
சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு என்பது பொய் வழக்கு. அறநி லையத்துறை அங்கு செல்லவே அதிகாரமில்லை. பீகாரில் நடந்த எதிர்கட்சி கூட்டம் என்பது அமலாக் கத்துறையால் பாதிக்கப் பட்டவர்கள் பங்கேற்ற கூட்டம். அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற வாய்ப்பில்லை.
பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி, ஆனால் அந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார்?. சீமான் தமிழ் தேசியத்தை கை விட்டால் பா.ஜ.க.வுடன் நெருங்கிவரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள், வக்கீல் சொக்கலிங்கம் தேசிய பொது குழு உறுப்பினர், நாகேசுவரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






