என் மலர்
நீங்கள் தேடியது "அரசு கலை அறிவியல் கல்லூரிகள்"
- கல்லூரிகளில் 2025- 2026 ஆம் கல்வியாண்டின் மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
- தகுதியானவர்களுக்கு 18.08.2025 அன்று முதல் 28.08.2025 வரை அத்தத்த மண்டவங்களில் நேர்காணல் நடைபெற்றது.
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 560 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2025- 2026 ஆம் கல்வியாண்டின் மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஏழை, எளிய மாணாக்கர்கள் உயர்கல்வியினை பெற வேண்டும். அனைவருக்கும் சமமான உயர்கல்வி கிடைத்திட வேண்டும் என்பதற்காக, அரசுக் கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் மட்டும் புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டு, அவ்விடங்களில் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், மாணவர்களின் தேவைக்கேற்ப 15,000-க்கும் மேற்பட்ட கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் உருவாக்கப்பட்டன. இதில் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை, மாணாக்கர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
அதன்படி, 21.07.2025 அன்று கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிக பணியமர்த்துதலுக்கான இணையதா விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு-விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
தகுதியானவர்களுக்கு 18.08.2025 அன்று முதல் 28.08.2025 வரை அத்தத்த மண்டவங்களில் நேர்காணல் நடைபெற்றது.
(01.09.2025) நேர்காணல் முடிவில் தற்போது தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களின் தெரிவுப் பட்டியல் Ingasa.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் தங்களது பயனர் குறியீடு (User id) மற்றும் கடவுச்சொல் (Password) வழியாக தாங்கள் தெரிவு செய்யப்பட்ட கல்லூரி மற்றும் விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
08.09.2025-க்குள் உரிய கல்லூரிகளில் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் பணியில் இணைய வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
- மொத்தம் 36 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவிலான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை:
ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியரின் உயர்கல்வித் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு, 2025-26-ம் ஆண்டிற்கான உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, 2025-26-ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 26.5.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையிலும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், இக்கல்வியாண்டில் (2025-2026), உயர் கல்வித் துறையின் சார்பில் வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய நான்கு இடங்களில் கூடுதலாக 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 30.5.2025 அன்று அறி க்கப்பட்டது.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்றைய தினம் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த 4 கல்லூரிகளும், தலா 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்படும். மேலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 ஆசிரியர்கள் (உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாமாண்டிற்கு மட்டும்) மற்றும் 14 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் வீதம் 4 கல்லூரிகளுக்கு மொத்தம் 48 ஆசிரியர்கள் மற்றும் 56 ஆசிரியரல்லாப் பணியிடங்களைத் தோற்றுவிக்கப்பட்டு, 4 கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடராச் செலவினத்திற்காக மொத்தம் 8 கோடியே 67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம், இப்பகுதிகளிலுள்ள சுமார் 1,120 மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுவார்கள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்ட இப்புதிய 4 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்த்து தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 18 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் ஐந்து தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம், 2 கோடியே 38 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணைவேந்தர் குடியிருப்பு, 8 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் உதவி பேராசிரியர்கள் குடியிருப்புகள் மற்றும் 6 கோடியே 56 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான குடியிருப்புகள், என மொத்தம் 36 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவிலான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ. வேலு, கோவி. செழியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உயர் கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வருகிற 25-ந்தேதி மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கட்ஆப் தயாரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்படும்.
- 25-ந்தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
சென்னை:
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து உயர் படிப்பில் சேருவதற்கான முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் தவிர கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கடந்த சில ஆண்டுகளாக மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் என மொத்தம் 1593 உள்ளன. அரசு கலைக்கல்லூரிகள் மட்டும் 164 செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் கடந்த 8-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான பதிவு தொடங்கியது.
தொடங்கிய முதல் நாளில் மட்டுமே 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 2-வது நாளான நேற்று வரை 52 ஆயிரம் மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து இருப்பதாக உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க 19-ந்தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
வருகிற 25-ந்தேதி மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கட்ஆப் தயாரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்படும். 25-ந்தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகளிடம் இந்த ஆண்டும் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை மேற்கொண்டு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வசதியாக பெரும்பாலான மாணவர்கள் இந்த முடிவை எடுக்கின்றனர்.
இதனால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வழக்கம்போல பி.காம்.., படிப்பதற்கான மோகம் குறையவில்லை. டாப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதிகளவில் இருப்பதால் பி.காம். பாட பிரிவுக்கு கடும் போட்டி நிலவக்கூடும். இதையடுத்து பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.பி.ஏ. போன்ற பட்டப்படிப்புகளில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த ஆண்டு 2.98 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த வருடம் இது மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க சென்னையில் ஆலோசனை மையம் தொடங்கப்பட உள்ளது.
மாணவர்கள் கல்லூரிகளில் சேருவது தொடர்பான விளக்கங்களை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதுதவிர டேட்டா சென்டரும் விரைவில் தொடங்க உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு அரசு கலை கல்லூரிகள் பற்றிய வரலாறு, தகவல்கள் சேகரித்து தொகுப்பாக இதன்மூலம் பாதுகாக்கப்பட உள்ளது.
- கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
- தரவரிசை பட்டியல் அந்தந்த அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் நாளை (25-ந்தேதி) அனுப்புகிறது.
சென்னை:
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு 3 லட்சத்து 14666 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 8-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் கல்லூரிகள் வாரியாக விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.
மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. ஒரு லட்சத்து 7395 மொத்த இடங்களுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருப்பதால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தான் கேட்ட பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் அந்தந்த அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் நாளை (25-ந்தேதி) அனுப்புகிறது. அதனை கல்லூரி முதல்வர்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டி வெளியிடுவார்கள். தமிழகத்தில் உள்ள 164 அரசு கலைக் கல்லூரிகளுக்கும் தனித்தனியாக தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படும்.
இதையடுத்து 29-ந்தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. 31-ந்தேதி வரை 3 நாட்கள் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு இக்கலந்தாய்வு நடைபெறும். ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதல் பொது கலந்தாய்வு நடக்கிறது. 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-வது கலந்தாய்வு நடைபெறுகிறது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22-ந்தேதி வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.






