என் மலர்
நீங்கள் தேடியது "பாலியல் தொலை"
- புகாரையடுத்து மகளிர் ஆணைய அதிகாரிகள் பல்கலைக் கழகத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.
- பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நெல்லை டவுனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். தொடர்ந்து அங்கு தற்காலிக பேராசிரியராக சில வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஆராய்ச்சி படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது அங்கு வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த அம்பையை சேர்ந்த கண்ணன்(வயது 55) என்பவர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாகவும், தனது ஆராய்ச்சி படிப்பை முடிப்பதற்கு பல்வேறு தடைகளை அவர் ஏற்படுத்தியதாகவும் அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை மாநில மகளிர் ஆணையம், பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்டோருக்கு சமீபத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த புகாரையடுத்து மகளிர் ஆணைய அதிகாரிகள் பல்கலைக் கழகத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.
இதனிடையே இளம்பெண் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாணவியாக இருந்தபோது பேராசிரியர் கண்ணன் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்ததாகவும், தற்போது தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில் அங்கு படிக்கும் மாணவர்களை எனக்கு எதிராக தூண்டி விட்டு அசவுகரியமான சூழ்நிலையை உருவாக்கியதாகவும் புகார் அளித்தாா.
அதன் அடிப்படையில் நெல்லை மாநகர மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் கீதா, டவுன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதா உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட அந்த முன்னாள் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அவரது புகார் மனு குறித்து பல்கலைக்கழக அளவில் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்திட நேற்று முன்தினம் துணை வேந்தர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முதல் விசாரணை தொடங்கி உள்ளது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி, டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் கண்ணன் மீது இந்திய தண்டனை சட்டம் 354(ஏ)-பாலியல் துன்புறுத்தல் என்ற பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 70 வயது தாத்தா மீது வழக்கு பதியபட்டுள்ளது
- பெற்றோர் இது–குறித்து ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் ஜீய–புரம் அருகேயுள்ள புத்த–னாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 7 வயது சிறுமி. பெற்றோர் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அதே பகுதியி–ல் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுமி தினமும் பள்ளிக்கு சென்றுவிட்டு, பெற்றோர் வரும் வரை பக்கத்து தெருவில் வசிக்கும் தனது பாட்டி வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.இதற்கிடையே அங்கு சிறுமியின் தாத்தாவான வெள்ளையன் (வயது 70), பேத்தி என்றும் பாராமல் அவருக்கு பல்வேறு வகைக–ளில் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதில் உடல் நலம் குன்றிய அவரை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அப்போதுதான் மகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய–வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது–குறித்து ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.அதன்பேரில் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வெள்ளை–யன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய தாத்தாவே இதுபோன்ற இழிசெயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையை ஏற்ப–டுத்தி இருக்கிறது.






