என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாண்டா கிளாஸ்"

    • வணிக வளாகங்களில் சாண்டாவை கொழுப்பாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளக்கூடாது.
    • மகிழ்ச்சியான உறவு முறை மற்றும் உணவு, பானங்களின் அடிப்படையில் குழந்தைகள் நாம் நினைப்பதைவிட அதிகமாக சாப்பிடுவார்கள்.

    சிட்னி:

    கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பரிசுப்பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

    வீடு வீடாக சென்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகளை வழங்குகிறார்கள். பொதுவாக கிறிஸ்துமஸ் தாத்தா உடல் பருமனுடன் இருப்பார்.

    இந்த நிலையில் உடல் பருமனான கிறிஸ்துமஸ் தாத்தாக்களை வணிக வளாகங்களில் தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுகாதார நிபுணர் வின்சென்ட் கான்ட்ரா வினாட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அதிக எடை கொண்ட கிறிஸ்துமஸ் தாத்தா ஒரு மோசமான முன்னுதாரணத்தை அமைத்து அதிகமாக சாப்பிடுவதை ஊக்குவிப்பதால் அனைத்து உடல் பருமனான சாண்டா கிளாசை (கிறிஸ்துமஸ் தாத்தா) தடை செய்ய வேண்டும். சாண்டா உடல் பருமனாக இருப்பார் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது.

    ஏனென்றால் அது தவறான செய்தியை அளித்துவிடும். நீங்கள் நிறைய சாப்பிட வேண்டும். அதை பண்டிகைகளுடன் தொடர்புப்படுத்தி கொண்டாட வேண்டும் என்பதற்கு எதிராக போராட விரும்புகிறேன். அதிக எடையுடன் இருப்பதை மகிழ்ச்சியுடன் தொடர்புபடுத்தக்கூடாது.

    புதிய நெறிமுறைகளை வகுத்து சாண்டா கிளாஸ் பருமன் இல்லாமல் இருக்க நான் விரும்புகிறேன். கிறிஸ்துமஸ் தாத்தா உடையின் முன்பகுதியில் தலையணைகள் அல்லது வேறு பொருட்களை திணிக்கும் பழக்கம் முடிவுக்கு வரவேண்டும்.

    வணிக வளாகங்களில் சாண்டாவை கொழுப்பாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளக்கூடாது. இது மகிழ்ச்சியான உறவு முறை மற்றும் உணவு, பானங்களின் அடிப்படையில் குழந்தைகள் நாம் நினைப்பதைவிட அதிகமாக சாப்பிடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாக்டர் வின்செண்டின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பீட்டர் ஹக் கூறும்போது, 'ஒல்லியான சாண்டா என்ற யோசனை ஆபத்தானது. நாள் முழுவதும் நிறைய குழந்தைகளை சந்திக்க சாண்டாஸ் வலுவாக இருக்க வேண்டும்' என்றார்.

    • சாண்டா கிளாசின் உண்மையான பெயர் `செயின்ட் நிக் கோலஸ்.
    • 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ பிஷப் ஆவார்.

    கிறிஸ்துமஸ் என்றாலே எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் கதாபாத்திரமாக இருப்பவர் கிறிஸ்துமஸ் தாத்தா. 1930-ம் ஆண்டுக்கு முன், கிறிஸ்துமஸ் தாத்தாவின் ஆடைகள் சிவப்பு நிறத்தில் இல்லை. நீலம், வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில்தான் இருந்தன. அதன் பிறகு 1930-ம் ஆண்டு சாண்டாவின் சிவப்பு ஆடை பிரபலமானது. அன்று முதல் இன்று வரை, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் சிவப்பு நிற சாண்டாவை நினைவுகூர்கின்றனர். சாண்டா கிளாசின் உண்மையான பெயர் `செயின்ட் நிக் கோலஸ். அவர் 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ பிஷப் ஆவார். துருக்கியில் பிறந்த அவர், ஏழைகளுக்கு உதவுவதற்காக தனது செல்வம் அனைத்தையும் கொடுத்து ஒரு புனிதரானார்.

    சாண்டா கிளாசுக்கு செயின்ட் நிக்கோலஸ், பாதர் கிறிஸ்துமஸ், தாத்தா புரோஸ்ட் மற்றும் கிரிஸ் கிரிங்கில் உள்ளிட்ட பல பெயர்கள் உள்ளன. பல நாடுகளில், கிறிஸ்துமஸ் தினம் அன்று சாண்டா கிளாஸ் வருவார் என்று குழந்தைகள் ஆவலுடன் காத் திருக்கிறார்கள்.

    கனடா நாடு சாண்டாவிற்கு ஒரு அஞ்சல் இடுகையை வழங்கியது. அங்கு மக்கள் சான்டா கிளாசுக்கு கடிதங்கள் எழுதலாம். அதற்கான அஞ்சல் குறியீடு, `H0H0H0'. இந்த அஞ்சல் சேவை ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிர கணக்கானவர்களுக்கு பதிலளிக்கிறது. ஜார்ஜியா மற்றும் அரிசோனா, அமெரிக்கா மற்றும் பின்லாந்தில் சாண்டா கிளாஸ் என்ற பெயரில் பல நகரங்கள் உள்ளன.

    1822-ம் ஆண்டு கிளமென்ட் மூர் எழுதிய `கிறிஸ்துமசுக்கு முந்திய இரவு' எனும் கட்டுரையில் கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் எழுதிய `ஜிங்கில் பெல் ஜிங்கில் பெல்' என்ற கவிதையில் கதாநாயகனாக கிறிஸ்துமஸ் தாத்தா இடம் பெறுகிறார். அதனாலேயே இன்றும் கிறிஸ்துமஸ் கலைநிகழ்ச்சிகள் நடக்கும் எல்லா இடத்திலும் கிறிஸ்துமஸ் தாத்தா வருகை நிச்சயமாக இடம்பெறும்.

    அப்போது ஜிங்கில் பெல் பாடல் ஒலிக்கப்படும். அதன் பின்னரே கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர் சாக்லேட்டுகளை வீசிக்கொண்டு வருவார். அவரது கைகுலுக்கலுக்கும், அவரை பார்ப்பதற்கும் ஆவலாய் இருக்கும் ரசிகர் பட்டாளம் ஒன்று கூடும்.

    இவ்வாறு கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி பல செய்திகள் இருந்தாலும், கிறிஸ்துமசின் மையச்செய்தியான பகிர்தலை பரிசுகள் கொடுப்பதன் மூலம் கிறிஸ்துமஸ் தாத்தா வெளிப்படுத்துகிறார். கடவுள் தன் ஒரே மகனை தன் மக்களுக்காக கொடுக்கிறார். இதுவே கிறிஸ்துமசின் மையமாக இருக்கிறது.

    இதனை உள்வாங்கி தன்னிடம் இருப்பதை இல்லாதவருக்கு பகிர்ந்து கொடுக்கும் தாராள மனதை கற்றுக்கொடுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா, அர்த்தமுள்ள விதத்தில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட அழைப்பு விடுப்பவராக இருக்கிறார்.

    • சாண்டா கிளாசின் உண்மையான பெயர் சாண்டா நிக்கோலஸ்.
    • புனித நிக்கோலசின் மண்டை ஓட்டில் இருந்து விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர்.

    உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டி வருகிறது. கிறிஸ்துமஸ் சீசனில் இரவு நேரங்களில் சாண்டா கிளாஸ், குழந்தைகளுக்கு பல பரிசுகளை வழங்கி சுற்றி வருவதை காண முடியும்.

    அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகம், இவற்றோடு முதுமையை பிரதிபலிக்கும் உடல் அமைப்புடன் வசீகரமாக சாண்டா கிளாஸ் வலம் வருவார்.

    கிறிஸ்தவ பிஷப்பான சாண்டா கிளாசின் உண்மையான பெயர் சாண்டா நிக்கோலஸ். துர்க்கிஸ்தானில் உள்ள மயூரா நகரில் பிறந்த இவர் மலைகளில் பனி நிறைந்த இடங்களில் வசிப்பதாக நம்பப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நிக்கோலஸ் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்குவது வழக்கம்.

    இந்நிலையில் சாண்டா கிளாசின் உண்மையான முகத்தை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தி உள்ளனர். சாண்டா கிளாசின் நிஜ வாழ்க்கை ஆயரான புனித நிக்கோலசின் மண்டை ஓட்டில் இருந்து அவரது முகத்தை தடயவியல் ரீதியாக மீண்டும் உருவாக்கம் செய்து விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர்.


    இந்த புதிய ஆய்வில் முதன்மை ஆசிரியரான சிசரோ மோரேஸ் கூறுகையில், சாண்டா கிளாஸ் வலுவான மற்றும் மென்மையான முகம் கொண்டவர் என்பதை அவரது முக அமைப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

    இது 1823-ம் ஆண்டு கவிதையில் விவரிக்கப்பட்டுள்ள அவரது முகத்துடன் ஒத்துப்போகிறது என்றார். அடர்ந்த தாடியுடன் கூடிய சாண்டா கிளாசை பற்றி நினைக்கும் போது நம் மனதில் இருக்கும் உருவத்தை நினைவூட்டுகிறது என்றும் மோரேஸ் கூறினார்.

    1950-ம் ஆண்டில் லூய்கி மார்டினோவோல் சேகரிக்கப்பட்ட தரவுகளை பயன்படுத்தியும், மண்டை ஓட்டை 3-டியில் வரைந்தும் சாண்டா கிளாஸ் உருவத்தை வடிவமைத்ததாக கூறி உள்ளனர்.

    ×