என் மலர்
நீங்கள் தேடியது "வீட்டில் சாராயம்"
- மணிகண்டன் தனது வீட்டின் எதிரே சாராய விற்பனை செய்தார்.
- மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவர் வைத்திருந்த 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப் பட்டது.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே கிளாப் பக்கம்் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது வீட்டின் எதிரே சாராய விற்பனை செய்தார். தகவல் அறிந்த மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு ஆய்வு செய்தார். அப்போது சாராயம் விற்ற மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவர் வைத்திருந்த 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப் பட்டது.
- பிளாஸ்டிக் கேனில் 20 லிட்டர் சாராய ஊறல் வைத்து இருந்தது .
- பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பவானி,
பவானி பகுதியில் வீட்டில் சாராய ஊறல் வைத்து இருப்பதாக மாவோயிஸ்ட்டு தடுப்பு சிறப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீ சார் பவானி அருகே உள்ள பெரியபுலியூர் பகுதியில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பெரியபுலியூர் ஆலமரத்து வலசு பகுதியை சேர்ந்த பெரியசாமி (70) என்பவரின் வீட்டில் 35 லிட்டர் பிளாஸ்டிக் கேனில் 20 லிட்டர் சாராய ஊறல் வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசா ரணை நடத்தியதில் சாராயம் தான் குடிப்பதற்கு வைத்து இருப்பதாகவும், யாருக்கும் விற்பனை செய்யவல்லை என தெரிவித்தார்.
பிளாஸ்டிக் கேனில் 20 லிட்டர் சாராய ஊறல் வைத்து இருந்ததுபிளாஸ்டிக் கேனில் 20 லிட்டர் சாராய ஊறல் வைத்து இருந்ததுஇதையடுத்து வீட்டில் சாராய ஊறல் வைத்திருந்த குற்றத்திற்காக மாவோயி ஸ்ட்டு சிறப்பு படை போலீசார் பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராய ஊறல், 2 பானைகள், வெள்ளம், வேலம்பட்டை போன்ற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






