என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்னுயிர் காப்போம் திட்டம்"

    • சாலை விபத்துக்களை குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
    • உயிர் இழப்புகளை குறைத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துக்களை குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம்.

    நாமக்கல் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரவிந்த் மருத்துவமனை, நாமக்கல் சிஎம் மருத்துவமனை, நாமக்கல் மகாராஜா சிறப்பு மருத்துவமனை, நாமக்கல் மாணிக்கம் மருத்துவமனை, நாமக்கல் மாருதி மருத்துவ–மனை, நாமக்கல் ஸ்ரீ அக்ஷயா மருத்துவமனை, நாமக்கல் தங்கம் மருத்துவமனை, நாமக்கல் வேலவன் மருத்துவமனை, ராசிபுரம் அரசு மருத்துவ–மனை, ராசிபுரம் சுகம் மருத்துவமனை, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, திருச்செங்கோடு விவேகா–னந்தா மெடிக்கல் கேர் மருத்துவமனை, பரமத்தி–வேலூர் அரசு மருத்துவமனை, குமாரபாளையம் அரசு மருத்துவமனை, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனை, கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆகிய 17 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் "இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48" திட்டத்தின் கீழ் திட்டம் தொடங்கிய 18.12.2021 முதல் 28.12.2021 வரை சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட 3,346 நபர்களுக்கு ரூ.2,76,54,632 மதிப்பில் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டுள்ளார்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • கடந்த 18-12-2021 அன்று இன்னுயிர் காப்போம் திட்டத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் தொடங்கி வைத்தேன்.
    • இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் உருவான இன்னுயிர் காப்போம் திட்டம், ஒரு முன்மாதிரி திட்டம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சொன்னதைச் செய்வது மட்டுமல்ல; சொல்லாமலும் செய்வோம். செய்கிறோம்.

    தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. ஆனால் கோல்டன் ஹவர்ஸ் காலக்கட்டத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென, கடந்த 18-12-2021 அன்று இன்னுயிர் காப்போம் திட்டத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் தொடங்கி வைத்தேன்.

    இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் உருவான இந்தத் திட்டம், ஒரு முன்மாதிரி திட்டம்.

    இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-ஆவது பேராகப் பனிமலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயனடைந்திருக்கிறார்.

    ஒன்றரை லட்சம் பேர் அல்ல; அத்தனை குடும்பங்கள் காக்கப்பட்டுள்ளன என்ற நெகிழ்வோடு இதனைப் பகிர்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×