search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ்   3,346  பேருக்கு ரூ.2.76 கோடி மதிப்பில்  சிகிச்சை
    X

    இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 3,346 பேருக்கு ரூ.2.76 கோடி மதிப்பில் சிகிச்சை

    • சாலை விபத்துக்களை குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
    • உயிர் இழப்புகளை குறைத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துக்களை குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம்.

    நாமக்கல் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரவிந்த் மருத்துவமனை, நாமக்கல் சிஎம் மருத்துவமனை, நாமக்கல் மகாராஜா சிறப்பு மருத்துவமனை, நாமக்கல் மாணிக்கம் மருத்துவமனை, நாமக்கல் மாருதி மருத்துவ–மனை, நாமக்கல் ஸ்ரீ அக்ஷயா மருத்துவமனை, நாமக்கல் தங்கம் மருத்துவமனை, நாமக்கல் வேலவன் மருத்துவமனை, ராசிபுரம் அரசு மருத்துவ–மனை, ராசிபுரம் சுகம் மருத்துவமனை, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, திருச்செங்கோடு விவேகா–னந்தா மெடிக்கல் கேர் மருத்துவமனை, பரமத்தி–வேலூர் அரசு மருத்துவமனை, குமாரபாளையம் அரசு மருத்துவமனை, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனை, கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆகிய 17 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் "இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48" திட்டத்தின் கீழ் திட்டம் தொடங்கிய 18.12.2021 முதல் 28.12.2021 வரை சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட 3,346 நபர்களுக்கு ரூ.2,76,54,632 மதிப்பில் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டுள்ளார்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×