என் மலர்
நீங்கள் தேடியது "Free travel for women பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்"
- மகளிர் விடியல் பயணத் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
- பயணம் 7,671 பேருந்துகளில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் மிக முக்கிய திட்டமாக, மகளிர் விடியல் பயணத்திட்டம் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணித்து வருகின்றனர்.
இந்தத் திட்டத்துக்கு தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்தப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
மகளிர் விடியல் பயண பேருந்துகளில் நாள்தோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்வதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் மகளிர் விடியல் பயணத் திட்டத்தில் (நேற்று) 29.05.2025 வரை தமிழ்நாடு முழுவதும் மகளிரால் 700.38 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பயணம் 7,671 பேருந்துகளில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
- அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்டத்தின் மூலம் 233 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
- கட்டணமில்லா பயண திட்டத்தால் பெண்களின் பயண எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் எருமாபாளையம், வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர் மற்றும் தாரமங்கலம் ஆகிய கிளைகளில் இருந்து 233 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கட்டணமில்லா பயண திட்டத்தால் பெண்களின் பயண எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 25.38 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயணங்கள் மகளிரால் மேற்கொள்ளப்பட்டது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து தற்பொழுது 2022 ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 66.26 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயணங்கள் மகளிரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடங்கப் பட்டது முதல் சேலம் மாவட்டத்தில் தற்பொழுது வரை மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தின் கீழ் 8.25 கோடி பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். அதிகபட்சமாக நகரப் பேருந்துகளில் பணிக்கு செல்லும் பெண்களும், உயர்கல்வி படிப்புக்குச் செல்லும் பெண்களும் இத்திட்டத்தினால் அதிகளவில் பயன்பெற்றுள்ளனர்.
பொதுப் போக்குவரத்து பயணங்களை ஊக்கு விப்பதும், பெண்களின் சமூக பொருளாதாரத்திற்கு உகந்ததாக அமைந்துள்ள தால் சேலம் மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களி டமும் மகளிருக்கான கட்ட ணமில்லா பயணத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






