என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகரெட்டுகள் பறிமுதல்"

    • தகுந்த ஆவணங்களின்றி எடுத்துவந்த ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 129 பண்டல் சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் பெருமளவு இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளில் பயணிகள் வருகை மற்றும் கார்கோ சேவையும் அதிகரித்துள்ள அதேவேளை தங்கம், போதைப்பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவைகள் கடத்தல் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

    இதனிடையே தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து ஏர்ஏசியா விமானம், திருச்சி விமான நிலையம் வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தபோது அவர் தகுந்த ஆவணங்களின்றி எடுத்துவந்த ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 129 பண்டல் சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தடை செய்யப்பட்ட சிகரெட் வகைகளை விமானத்தில் கடத்தி வந்ததை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இரண்டு பயணிகளிடம் இருந்து ரூ.21.31 லட்சம் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றது.
    • கடத்தலில் ஈடுபட்ட பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.

    சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மாத்யூ ஜால்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது:

    கடந்த 29-ந்தேதி, துபாயிலிருந்து வந்த பயணி ஒருவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்ட போது, ரூ.1 லட்சம் மதிப்புள்ள 50 பெட்டி சிகரெட்டுகளை மறைத்து கொண்டுவந்தது தெரிய வந்தது.அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 260 கிராம் எடைகொண்ட தங்கமும் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.11.47 லட்சம் ஆகும்.

    மற்றொரு சம்பவத்தில், துபாய் பயணி ஒருவரிடம் இருந்து, தூள் வடிவத்தில் தங்கம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் இருந்த ஒரு தங்கச் சங்கிலியும், ஒரு தங்க நாணயமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவற்றின் மொத்த எடை 223 கிராம் ஆகும். இதன் மதிப்பு ரூ.9.84 லட்சம் ஆகும். இரண்டு பயணிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.21.31 லட்சம் ஆகும். இரண்டு பயணிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×