என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சோனாலி போகட்"
- சோனாலி போகத் கடந்த மாதம் 23-ந்தேதி கோவாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- சோனாலி போகத்தின் மரணம், கொலையாக கருதப்படுகிறது.
புதுடெல்லி :
அரியானா மாநிலம் ஹிசாரை சேர்ந்தவர் சோனாலி போகத். பா.ஜனதா பெண் பிரமுகர். இவர் கடந்த மாதம் 23-ந் தேதி, கோவாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம், கொலையாக கருதப்படுகிறது. கோவா போலீசார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, கோவா மாநில முதல்-மந்திரி பிரமோத் சவந்த், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. சோனாலி போகத்தின் மகள் உள்பட அரியானாவை சேர்ந்த சிலரின் வேண்டுகோள் காரணமாக, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க கடிதம் எழுதியதாக பிரமோத் சவந்த் நிருபர்களிடம் தெரிவித்தார்.
- கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது சோனாலி போகட் மர்மமாக மரணம் அடைந்தார்.
- போதை பொருள் வியாபாரி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அரியானாவை சேர்ந்த நடிகையும், பா.ஜனதா பிரமுகருமான சோனாலி போகட் சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது மர்மமாக மரணம் அடைந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகம் கிளப்பினர்.
சோனாலிக்கு அவரது உதவியாளர் சுதீர் சங்வான் போதை மருந்து கலந்த உணவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டார் என்றும், இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது என்றும் போலீசில் புகார் அளித்தனர். சோனாலியின் சொத்துக்களை அபகரிக்க இந்த கொலை நடந்துள்ளது என்றும் குற்றம் சாட்டினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் போதை பொருள் வியாபாரி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மர்மமாக இறந்த சோனாலி ரூ.110 கோடி சொத்துக்களின் உரிமையாளர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ரூ.96 கோடி பதிப்பில் பண்ணை வீட்டுடன் பல ஏக்கர் நிலம் உள்ளது. சாந்த் நகரில் ரூ.3 கோடி மதிப்புள்ள வீடுகள் கடைகள் உள்ளன. ரூ.6 கோடி மதிப்பில் ரிசார்ட்டும் இருப்பதாக கூறப்படுகிறது.
- பிரபல நடிகையும், அரியானா மாநில பா.ஜனதா நிர்வாகியுமான சோனாலி போகாட் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார்.
- இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் தெரிவித்த பின்னர், இவ்வழக்கில் அடுத்தடுத்து சிலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் (வயது 42), தனது அலுவலக உதவியாளர்களுடன் கோவா சென்றிருந்த நிலையில் கடந்த 22-ந்தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். சோனாலி போகட் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் கோவா போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து சோனாலியின் உதவியாளர்களான சுதிர் சக்வான், சுக் விந்தர் வாசி ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வடக்கு கோவா அஞ்சனாவில் உள்ள ரெஸ்டாரண்டில் நடந்த விருந்தில் போதை ஏற்படுத்தும் ஒரு வேதிப் பொருளை தண்ணீரில் கலந்து சோனாலிக்கு கொடுத்ததாக உதவியாளர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதற்கிடையே சோனாலியின் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் ரத்த காயங்கள் அல்லாத தாக்குதல் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சுதிர் சக்வான், சுக்விந்தர் சிங்கை கோவா போலீசார் கைது செய்தனர்.
அதன்பின்னர் சோனாலி போகட் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சோனாலி பங்கேற்ற இரவு விருந்து நிகழ்ச்சி நடந்த கிளப் உரிமையாளர் எட்வின் நூனெஸ் கைது செய்யப்பட்டார். அந்த கிளப்பின் கழிப்பறையில் போதை பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்து அவர் கைதாகி உள்ளார். போதை பொருள் தன்மை குறித்து இன்னும் உறுதிப் படுத்தபடவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் சுதிர் சுக்வானுக்கு போதை பொருளை விற்றதாக தத்தா பிரசாத் காவங்கர் கைது செய்யப்பட்டார். இவர் சோனாலி தங்கியிருந்த ஓட்டல் அறையின் ரூம் பாயாக பணியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் மேலும் ஒரு போதை பொருள் விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர். ரமா மஞ்ச்ரேக்கர் என்ற போதை பொருள் வினியோகம் செய்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- பிரபல நடிகையும், அரியானா மாநில பா.ஜனதா நிர்வாகியுமான சோனாலி போகாட்.
- இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் தெரிவித்திருந்தார்.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் (வயது 42), தனது அலுவலக உதவியாளர்களுடன் கோவா சென்றிருந்த நிலையில் கடந்த 22-ந்தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். சோனாலி போகட் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் கோவா போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து சோனாலியின் உதவியாளர்களான சுதிர் சக்வான், சுக் விந்தர் வாசி ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வடக்கு கோவா அஞ்சனாவில் உள்ள ரெஸ்டாரண்டில் நடந்த விருந்தில் போதை ஏற்படுத்தும் ஒரு வேதிப் பொருளை தண்ணீரில் கலந்து சோனாலிக்கு கொடுத்ததாக உதவியாளர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதற்கிடையே சோனாலியின் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் ரத்த காயங்கள் அல்லாத தாக்குதல் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சுதிர் சக்வான், சுக்விந்தர் சிங்கை கோவா போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சோனாலி போகட் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சோனாலி பங்கேற்ற இரவு விருந்து நிகழ்ச்சி நடந்த கிளப் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அந்த கிளப்பின் கழிப்பறையில் போதை பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்து அவர் கைதாகி உள்ளார். போதை பொருள் தன்மை குறித்து இன்னும் உறுதிப் படுத்தபடவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
அதே போல போதை பொருள் விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சுதிர் சக்வான், சுக் விந்தர் வாசி ஆகியோர் தாங்கள், அஞ்சுனா பகுதியை சேர்ந்த தத்தா பிரசாத் கோன்சர் என்பவரிடம் போதை பொருளை வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து தத்தா பிரசாத்தை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலைக்கு பின்னணியில் பணபிரச்சினை இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் 22-ந்தேதி மரணம் அடைந்தார்.
- போதை ஏற்படுத்தும் வேதிப்பொருளை பானத்தில் கலந்து சோனாலிக்கு கொடுத்ததாக கூட்டாளிகள் ஒப்புதல்.
பனாஜி :
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் (வயது 42) தனது கூட்டாளிகள் இருவருடன் கோவா சென்றிருந்த நிலையில் அங்கு கடந்த 22-ந்தேதி மர்ம மரணம் அடைந்தார்.
சோனாலி மாரடைப்பால் இறந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர், உடன் சென்றிருந்த கூட்டாளிகள் இருவரால் கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது சகோதரர் ரிங்கு டாகா கோவா போலீசில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், சோனாலியின் கூட்டாளிகளான சுதிர் சக்வான், சுக்விந்தர் வாசி ஆகிய இருவரை போலீசார் நேற்று முன்தினம் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், வடக்கு கோவா அஞ்சுனாவில் உள்ள ரெஸ்டாரண்டில் நடந்த ஒரு பார்ட்டியில், போதை ஏற்படுத்தும் ஒரு வேதிப்பொருளை பானத்தில் கலந்து சோனாலிக்கு கொடுத்ததாக கூட்டாளிகள் இருவரும் ஒப்புக்கொண்டிருப்பதாக போலீசார் கூறினர். கூடுதல் தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.
நேற்று முன்தினம் அளிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், சோனாலியின் உடலில் ரத்த காயங்கள் அல்லாத தாக்குதல் காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டாளிகள் இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றாலும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் வட்டாரங்கள் கூறின.
இந்நிலையில் நடிகை சோனாலி மரணம் தொடர்பாக ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.
சோனாலி மரண வழக்கை டி.ஜி.பி. கண்காணித்து வருவதாகவும், இந்த வழக்கில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க போலீசுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் 22-ந்தேதி மரணம் அடைந்தார்.
- சோனாலி மரணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன்பாக அம்மாவிடம் செல்போனில் பேசினாள்.
பனாஜி :
அரியானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் (வயது 42) கோவாவுக்கு விடுமுறையை கழிக்க தனது கூட்டாளிகளுடன் சென்றிருந்தார். ஆனால் அவர் அங்கு 22-ந் தேதி திடீர் மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக போலீஸ் தரப்பில் முதலில் கூறப்பட்டது.
ஆனால் இப்போது இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சோனாலி மரண தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு கோவா வந்தனர். அதைத்தொடர்ந்து, நடிகை சோனாலி தனது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது சகோதரர் ரிங்கு டாகா திடுக்கிடும் புகார் கூறி உள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-
தனது மரணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன்பாக சோனாலி, அம்மாவிடம் செல்போனில் பேசினாள். அப்போது அவள் கலக்கம் அடைந்திருந்தாள். தனது 2 கூட்டாளிகள் மீது புகார் கூறினாள். அவர்களால் அவள் கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.
அவளது மரணத்தைத் தொடர்ந்து அரியானாவில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து ரகசிய கண்காணிப்பு கேமராக்கள், மடிக்கணினி, முக்கிய பொருட்கள் யாவும் காணாமல் போய் உள்ளன.
என் சகோதரியின் பிரேத பரிசோதனையை டெல்லி அல்லது ஜெய்ப்பூர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் நடத்துவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நடிகை சோனாலி மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என கூறி கோவா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே கோவா முதல்-மந்திரி பிரமோத் சவந்த், "இந்த விவகாரத்தில் கோவா போலீஸ் விசாரணை நடத்துகிறது. நான் டி.ஜி.பி. ஜஸ்பால் சிங்கிடம் வழக்கு விசாரணை நிலவரம் குறித்து கேட்டறிந்து வருகிறேன்" என தெரிவித்தார்.
இருப்பினும் நடிகை சோனாலி சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என அரியானா எதிர்க்கட்சிகள் ஓங்கிக்குரல் கொடுத்து வருகின்றன.
- நடிகை சோனாலி போகட் தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகமாகி டிக் டாக் வீடியோக்களில் பிரபலமானார்.
- பிரபலமானதைத் தொடர்ந்து 2008-ல் பா.ஜனதாவில் இணைந்து 2019 அரியானா தேர்தலில் ஆதம்பூரில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டார்.
சண்டிகர்:
கோவாவில் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான நடிகை சோனாலி போகட் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 42.
நடிகை சோனாலி போகட் தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகமாகி டிக் டாக் வீடியோக்களில் பிரபலமானார். 2020-ல் நடந்த பிக் பாஸ் ஷோவிலும் கலந்து கொண்டார். பிரபலமானதைத் தொடர்ந்து 2008-ல் பா.ஜனதாவில் இணைந்து 2019 அரியானா தேர்தலில் ஆதம்பூரில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டார்.
அப்போதைய காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷ்னோய் பா.ஜனதாவில் சேர்ந்த நிலையில் அவர் கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இந்த இடைத்தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக சோனாலி போட்டியிடபோவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் மரணமடைந்திருக்கிறார். அவர் கோவாவிற்கு நண்பர்களுடன் சென்றிருந்த நிலையில் இந்த திடீர் மரணம் நிகழ்ந்திருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்