என் மலர்
நீங்கள் தேடியது "கல்லூரி மாணவன் தற்கொலை"
- சத்ய நாராயணன் தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் சிலருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி உள்ளார்.
- விசாரணை முடிவில் சத்யநாராயணன் தற்கொலைக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூா் பச்சையப்பன் நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது மனைவி வேலுமணி. இவா்களது மகன் சத்யநாராயணன் (வயது 21) .கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தாா்.
நேற்று வீட்டின் மாடியில் உள்ள அறையில் சத்ய நாராயணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சத்ய நாராயணன் தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் சிலருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், ஒரு மாணவரின் பெயரை குறிப்பிட்டு அவா் தொடா்ந்து மிரட்டுவதாகவும், வகுப்பறையில் வைத்து அடித்ததில் இருந்து தன்னால் தூங்க முடியவில்லை. இது குறித்து கல்லூரியில் புகாா் தெரிவித்தால், வெளி ஆட்களை அழைத்து வந்து என்னை ஏதாவது செய்து விடுவாா்களோ? என்று பயமாக உள்ளது. ஆகவே, தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் எனக்கு வருகிறது என பதிவாகியிருந்தது.
எனவே சத்யநாராயணன் 'ராக்கிங்' காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது தொடர்பாக 3 மாணவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் சத்யநாராயணன் தற்கொலைக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலகிருஷ்ணன் புதூர் அருகே கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கல்லூரி மாணவன் தற்கொலை குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்.ஜி.ஓ.காலனி:
மேலகிருஷ்ணன் புதூர் அருகே பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 58), மீனவர். இவரது மனைவி ரூபின் மேரி (52).
இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2-வது மகன் ரூபிக்சன் காஸ்ட்ரோ (22). இவர் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக ரூபிக்சன் காஸ்ட்ரோ தனது தாயாரிடம் படிப்பு சரிவர புரியவில்லை என்று கூறிவந்துள்ளார். இதற்கு தாயார் அவரை சமாதானம் செய்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ரூபின் மேரி வேலைக்கு சென்றார்.
வீட்டில் ரூபிக்சன் காஸ்ட்ரோ மட்டும் இருந்தார். வேலைக்கு சென்ற அலெக்ஸ் மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த ரூபிக்சன் காஸ்ட்ரோவை சாப்பிடுமாறு கூறினார். அதற்கு அவர் தனக்கு தற்பொழுது சாப்பாடு வேண்டாம் என்று கூறி விட்டு வெளியே சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற ரூபின் மேரி வீடு திரும்பினார். அப்போது மகனை கேட்டபோது கணவர் அலெக்ஸ் வெளியே சென்று இருப்பதாக கூறினார். ஆனால் ரூபிக்சன் காஸ்ட்ரோவின் மோட்டார் சைக்கிள் மற்றும் செருப்பு வீட்டின் வெளியே கிடந்ததால் ரூபின் மேரிக்கு சந்தேகம் வந்தது. மகனை வீட்டில் தேடினார்கள். அப்போது வீட்டில் உள்ள அறையில் ரூபிக்சன் காஸ்ட்ரோ தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தூக்கில் பிணமாக தொங்கிய ரூபிக்சன் காஸ்ட்ரோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.






