என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோரோ வைரஸ்"

    • அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக அந்த சொகுசு கப்பல் சென்று கொண்டிருந்தது.
    • தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கப்பல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் பிரபல சுற்றுலா நிறுவனங்களில் ஒன்றான குனார்ட் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் இயக்கப்படும் சொகுசு கப்பல்களில் குயின் மேரி 2 ஒன்றாகும். இந்த ராட்சத சொகுசு கப்பலில் அதிநவீன சொகுசு அறைகள், பிரமாண்ட நீச்சல் குளம், திரையரங்கம், நூலகம், கேசினோ உள்ளிட்ட சகல வசதிகளும் அமைக்க பெற்றுள்ளது.

    உலகில் உள்ள சொகுசு கப்பல்களில் மிகவும் ஆடம்பரமான சொகுசு கப்பல் என குயின் மேரி 2 வர்ணிக்கப்படுகிறது. மேலும் இதனை மிதக்கும் சொர்க்கம் என சொல்லும் அளவுக்கு மிகவும் புகழ் பெற்றதாக விளங்குகிறது.

    இந்த சொகுசு கப்பல், கரீபியன் தீவு நாடுகளில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் வழியாக இங்கிலாந்தின் சவுத்ஹாம்டன் நகருக்கு இயக்கப்பட்டது. இந்த கப்பலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், கப்பல் கேப்டன் உள்பட 1,200-க்கும் மேற்பட்ட சிப்பந்திகள் பயணித்தனர்.

    அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக அந்த சொகுசு கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கப்பலில் இருந்த பலருக்கு 'நோரோ' என்னும் வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த தொற்று பாதிப்பால் பயணிகளுக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி சொகுசு கப்பலில் உள்ள 250 சுற்றுலா பயணிகளுக்கும், 20 சிப்பந்திகளுக்கும் இந்த நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதும், மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ளாதபட்சத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உண்டு என தெரிவித்துள்ளனர். தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கப்பல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

    • கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரும் குடும்பத்துடன் அருகில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்டு உள்ளனர்.
    • பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் ஆலப்புழா மற்றும் வயநாடு மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் சுகாதார துறையினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர்.

    லேசான காய்ச்சல் மற்றும் வாந்தி, மயக்கம் இருப்போரை கண்டறிந்து அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் பாலக்காடு மாவட்டம் லக்கிடி மற்றும் பேரூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த சிலருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் தலைவலி இருந்தது தெரியவந்தது.

    மேலும் இப்பகுதியை சேர்ந்த சில மாணவர்களுக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

    அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து சுகாதார துறையினர் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 மாணவர்களுக்கும் ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஷிகெல்லா வைரஸ் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரும் குடும்பத்துடன் அருகில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்டு உள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு ஷிகெல்லா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகம் சுகாதார துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    புதிய வகை நோரோ வைரஸ் தண்ணீர் மூலம் பரவுவதாக தெரியவந்துள்ளது. எனவே நீர் நிலைகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை.

    கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கேரளாவின் மலையோர மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. மத்திய நோய் தடுப்பு குழுவினர் மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் எடுத்த தடுப்பு நடவடிக்கை காரணமாக நிபா வைரஸ் கட்டுக்குள் வந்தது.

    இந்த நிலையில் வயநாடு மாவட்டத்தில் இப்போது புதிய வகை நோரோ வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது.

    வயநாடு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 2 நாட்களாக வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக அங்கு சுகாதாரத்துறையினர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    இதில் அவர்களுக்கு புதிய வகை நோரோ வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உறுதி செய்தார்.

    மந்திரி வீணா ஜார்ஜ்

    இதுதொடர்பாக மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:- வயநாடு மாவட்டத்தில் புதிய வகை நோரோ வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் உள்பட 34 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வைரஸ் தண்ணீர் மூலம் பரவுவதாக தெரியவந்துள்ளது. எனவே நீர் நிலைகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×