search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோரோ வைரஸ்
    X
    நோரோ வைரஸ்

    கேரளாவில் கொரோனாவை தொடர்ந்து புதிய வகை நோரோ வைரஸ் தாக்குதலுக்கு 34 பேர் பாதிப்பு

    புதிய வகை நோரோ வைரஸ் தண்ணீர் மூலம் பரவுவதாக தெரியவந்துள்ளது. எனவே நீர் நிலைகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை.

    கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கேரளாவின் மலையோர மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. மத்திய நோய் தடுப்பு குழுவினர் மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் எடுத்த தடுப்பு நடவடிக்கை காரணமாக நிபா வைரஸ் கட்டுக்குள் வந்தது.

    இந்த நிலையில் வயநாடு மாவட்டத்தில் இப்போது புதிய வகை நோரோ வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது.

    வயநாடு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 2 நாட்களாக வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக அங்கு சுகாதாரத்துறையினர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    இதில் அவர்களுக்கு புதிய வகை நோரோ வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உறுதி செய்தார்.

    மந்திரி வீணா ஜார்ஜ்

    இதுதொடர்பாக மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:- வயநாடு மாவட்டத்தில் புதிய வகை நோரோ வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் உள்பட 34 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வைரஸ் தண்ணீர் மூலம் பரவுவதாக தெரியவந்துள்ளது. எனவே நீர் நிலைகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×