என் மலர்
நீங்கள் தேடியது "அரசு பள்ளி கட்டிடம்"
- 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
- பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் கட்டடத்தை சீரமைக்க முன் வந்தனர்.
பல்லடம்:
பல்லடம் வடுகபாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 1956ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அப்போதைய தமிழக முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பெருமைக்குரிய இந்தப்பள்ளியின் கட்டடம் ஒன்று மிகுந்த சேதமடைந்து இருந்தது.
இதனை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் கட்டடத்தை சீரமைக்க முன் வந்தனர். இது குறித்து கடந்த மாதம் முன்னாள் மாணவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் ரூ.30 லட்சம் செலவில் அரசுப் பள்ளி கட்டடத்தை ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றி தரைத்தளத்திற்கு டைல்ஸ் கற்கள் பதிப்பது, அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தி நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் சீரமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் அமைப்பு நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், திண்டு பாலு, சத்தியமூர்த்தி, ரமேஷ்குமார், மோகனகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகர தி.மு.க.பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, சசிரேகா ரமேஷ்குமார்,ஆசிரிய,ஆசிரியைகள்,பெற்றோர்கள்,மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள கீழநாலுமூலைக்கிணறு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் 4 வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. இதில் 2 வகுப்பறை கட்டிடங்கள் பழுதாகியுள்ளன. மேலும் அந்த கட்டிடங்களின் மேற்கூரையும் சேதமடைந்து மழை பெய்தால், தண்ணீர் வகுப்பறைக்குள் விழுகிறது.
தற்போது பெய்து வரும் தொடர் மழையால் இந்த 2 வகுப்பறை கட்டிடங்களிலும் மழை நீர் விழுந்து, மாணவர்கள் உட்காரும் பெஞ்சு, மேஜைகள் மற்றும் கல்வி சாதனங்கள் உள்பட அனைத்தும் சேதமடைந்துள்ளன.
இதனால் இந்த வகுப்பறைகளின் மாணவர்களை, மற்ற 2 வகுப்பறையில் உட்கார வைக்க வேண்டிய நிலை இருக்கிறது. தற்போது கொரோனா காலகட்டமாக இருப்பதால் வகுப்பறைகளில் அரசு வழிகாட்டு நெறிமுறையின்படி சமூக இடைவெளியுடன் உட்கார வைக்க முடியாமல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இனியும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும். இந்த பள்ளியின் வகுப்பறை கட்டிடங்களை சீரமைத்து கொடுத்து மாணவர்கள் சிரமமின்றி கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






