என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை வெள்ள பாதிப்பு"

    • சென்னையில் மழைநீர் வடிகால்வாய் முழுவதும் சீரமைக்கபட்டு உள்ளதால் இந்த ஆண்டு சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்தை 7 பிரிவுகளாக பிரித்து தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நீர் நிலைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு , ஏரி,

    குளங்களை தூர்வாராதது மற்றும் மழைநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இந்த பெருவெள்ளத்திற்கு காரணமாக கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பருவ மழை காலத்தின் போது வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை மாநகர் முழுவதும் மழைநீர் கால்வாய் கட்டபட்டும் சீரமைக்கப்பட்டும் வருகிறது.

    அடுத்த ஒரு மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பருவமழைக்கு முன்பாக மழைநீர் வடிகால் பணி, கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மழைநீர் வடிகால்வாய் முழுவதும் சீரமைக்கபட்டு உள்ளதால் இந்த ஆண்டு சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக வடசென்னையில் சுமார் 12 கிலோமீட்டர் நீளமுள்ள ஓட்டேரி நல்லா கால்வாய் மழை நீரில் மூழ்கி கரையோர பகுதியில் உள்ள வீடுகள் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருந்து வந்தது. இந்த நல்லா கால்வாய் வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், பெரம்பூர், ஓட்டேரி, வியாசர்பாடி, புளியந்தோப்பு, பேசின் பாலம் பகுதி வழியாக செல்கிறது. இந்த கால்வாயில் அதிக அளவு நீர் சேரும் பகுதிகளாக புரசை வாக்கம், அயனாவரம், பெரம்பூர், ஓட்டேரி, பட்டாளம், சூளை, புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்கள் உள்ளன. நல்லா கால்வாய் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுவதாகவும் ஆக்கிரமிப்புகள், கழிவுகளை கொட்டுதல், வீடுகளில் இருந்து சட்டவிரோதமாக கழிவு நீர் இணைப்பு உள்ளிட்டவற்றால் கால்வாய் அதன் பொலிவை இழந்து உள்ளது. மேலும் மழை நீர் வெளியேறுவதற்கு பெரும் தடையாக உள்ளது. கனமழையின் போது கழிவுகளால் தடைப்பட்டு மழைநீர் குடியிருப்பு பகுதி மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக ஆக்கிரமிப்பு காரணமாக கணேசபுரம் சுரங்கப்பாதை, புளியந்தோப்பு, பட்டாளம், பெரம்பூர், ஜமாலியா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிக அளவில் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ஓட்டேரி நல்லா கால்வாயின் நீர்வழிப்பாதையின் உண்மையான அகலம் 100 அடி. ஆனால், பெரம்பூரில் உள்ள ரெயில்வே கிராசிங் மற்றும் பக்கிங்காம் கால்வாய் சந்திப்பு பகுதிக்கு அருகில் உள்ள மின் நிலையம் பகுதியில் இது வெறும் 20 அடியாக உள்ளது. எனவே ரயில் பாதைக்கு அருகிலும், பக்கிங்காம் கால்வாய் அருகே உள்ள நல்லா கால்வாயை அகலப்படுத்துவதும் முக்கியம். நீர்வளத்துறைக்கும், மாநகராட்சிக்கும் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் இந்த பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    கால்வாயை அகலப்படுத்தும் மற்றும் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறைதான் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக பரிந்துரைத்துள்ளோம் என்றார்.

    ஜமாலியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ஓட்டேரி நல்லா கால்வாயை அகலப்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாயின் பல பகுதிகளில் குறிப்பாக அயனாவரம், பெரம்பூர், பட்டாளம், புளியந்தோப்பு பகுதிகளில் ஆழம் மிகவும் குறைவாக உள்ளது. ஒவ்வொரு முறை வெள்ளபாதிப்பு ஏற்படும் போதும் இது தொடர்பாக மாநகராட்சி நீர்வளத்துறையிடம் தெரிவிக்கும். வழக்கம்போல் எந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதால் பொதுமக்கள்தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மழை வெள்ள காலங்களில் வடசென்னை மக்களின் முக்கிய பிரச்சினையாக உள்ள இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து திரு.வி.க நகர் தொகுதி எம்.எல்.ஏ. தாயகம் கவி கூறும்போது,

    பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய் தூர்வாரும் பணிகள் 30.07.2023 அன்று தொடங்கியது. சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்தை 7 பிரிவுகளாக பிரித்து தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தற்பொழுது பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மிதவை வாகனம், பொக்லைன் வாகனம் மூலமும் நல்லா கால்வாயில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு 100-க்கும் மேற்பட்ட லாரிகளில், கழிவுகள் கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த மாத இறுதியில் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டு வெள்ளநீர் வெளியேறுவதற்கு தயார் நிலையில் வைக்கப்படும் என்றார்.

    • வீடுகளுக்குள்ளும், சுற்றுப்புறத்திலும் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும்.
    • மழை வெள்ள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கான்கிரீட் வீடுகளை அமைத்து தர வேண்டும்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதிலும் காயல்பட்டினம் முழுவதுமாக பாதிக்கப்பட்டு தனித்தீவாக காட்சியளிக்கிறது.

    இது சம்பந்தமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகம்மது அபூபக்கர் தலைமையில் மாநில செயலாளர் காயல் மகபூப், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை செயலாளர் நவாஸ் அகமது, மில்லி கவுன்சில் நிர்வாகி இபுனு சவூது ஆகியோர் தமிழக அரசின் தலைமைச் செயலாளரான சிவ்தாஸ் மீனா, முதல்-அமைச்சரின் செயலாளர் முருகானந்தன் ஆகியோரை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    காயல்பட்டினம் நகர் முழுவதுமே வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வரும் நிலையில் பொதுநல அமைப்புகளின் மூலம் இயன்ற அளவு மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியையும் செய்து அரசு சார்பில் போர்க்கால அடிப்படையிலான மீட்பு பணிகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இதன்படி நகரில் உடனடியாக மின்விநியோகத்தை வழங்கவும், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவையை தொடர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் வீடுகளுக்குள்ளும், சுற்றுப்புறத்திலும் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண தொகையை வழங்கவும், ஆவின் பால் தடையின்றி கிடைக்கவும், ஆண்டுதோறும் நிகழும் மழை வெள்ள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கான்கிரீட் வீடுகளை அமைத்து தர வேண்டும். கிடப்பில் உள்ள மழை நீர் வடிகால் திட்டத்திற்கு உடனடியாக செயல் வடிவம் கொடுக்கவும், சிறிய அளவு மழை பெய்தால் கூட வரண்டியவேல் விலக்கு அருகில் உள்ள பாலம் தண்ணீரால் மூழ்கடிக்கப்பட்டு தூத்துக்குடி-திருச்செந்தூர் இடையே போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டு விடுவதால் குறிப்பிட்ட அந்த பாலத்தை உயர்த்தி அமைக்கும் பணியை உடனே மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து காயல்பட்டினத்திற்கு ஆவின் பால் விநியோகத்தை தொடரவும், உப மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதை விரைந்து சீரமைக்கவும், காயல்பட்டினத்தில் மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளை விரைந்து செயல்படுத்த சிறப்பு அதிகாரியை நியமித்தும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடனடியாக உத்தரவிட்டார். 

    மழை வெள்ள பாதிப்புக்கு இடையே நிவாரண முகாமில் தங்கியிருந்த பெண்ணுக்கு பாரம்பரிய முறைப்படி கோவிலில் எளியமுறையில் திருமணம் நடந்தது. #KeralaFlood #ReliefCamp
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தால் வடக்கு மலப்புரம் மாவட்டத்திலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அஞ்சு (வயது 24) என்பவர் வீடும் வெள்ளத்தில் மூழ்கியதால் அவர் குடும்பத்தினருடன் அங்குள்ள தொடக்க பள்ளியில் 3 நாட்களாக தங்கியுள்ளார். அஞ்சுவுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்திருந்த சமயத்தில் கனமழை பெய்யத்தொடங்கியதால் திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்தனர்.

    ஆனால் அவர்களுடன் நிவாரண முகாமில் தங்கியிருந்த பலர் திருமணத்தை ஏன் தள்ளிவைக்கிறீர்கள், நடத்துங்கள் என்று ஊக்கப்படுத்தினார்கள். இதுபற்றி மணமகன் ஷைஜூ குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது அவர்களும் சம்மதித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலை அஞ்சு நிவாரண முகாம் அருகில் உள்ள கோவிலுக்கு பாரம்பரிய சிவப்பு பட்டு சேலை அணிந்து நடந்து சென்றார். மணமகன் ஷைஜூவும் குடும்பத்தினருடன் அங்கு வந்துசேர்ந்தார்.

    கோவிலில் எளியமுறையில் அவர்களது திருமணம் நடந்தது. பின்னர் அஞ்சு மணமகன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இந்த திருமணம் நிவாரண முகாமில் மழை பாதிப்பினால் சோகத்தில் இருந்தவர்கள் மத்தியில் சிறிது உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    கேரளாவில் மழை, வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான திருமண விழாக்கள் தள்ளிவைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  #KeralaFlood #ReliefCamp 
    ×