என் மலர்
நீங்கள் தேடியது "தந்தை தகராறு"
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே சுத்துக்கேணி காலனி தண்ணீர்தொட்டி தெருவை சேர்ந்தவர் அய்யனார் கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலையரசி. இவர்களது மகள் தமிழரசி (வயது24). அய்யனார் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று அய்யனார் மதுகுடித்துவிட்டு மனைவியை அடித்து உதைத்தார். பின்னர் அவர் மீண்டும் மதுகுடிக்க சென்று விட்டார்.
தினமும் தந்தை மதுகுடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்ததால் தமிழரசி மனவேதனை அடைந்தார். இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தமிழரசி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் காட்டேரிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






