என் மலர்
செய்திகள்

குடி போதையில் மகனின் கழுத்தை பிளேடால் அறுத்த தந்தை
குடிபோதையில் தகராறு செய்த தந்தையை மகன் தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த அவர் மகனின் கழுத்தை பிளேடால் அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி:
திருச்சி செந்தண்ணீர்புரம் கோவன் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 57) லாரி டிரைவர். இவரது மகன் மணிகண்டன். இந்நிலையில் சேகர் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டார். இதை மணிகண்டன் தட்டிக்கேட்டார். அப்போது தந்தை மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் கிரிக்கெட் மட்டையால் சேகரை தாக்கினார்.
சேகர் பிளேடால் தனது மகன் மணிகண்டன் கழுத்தை அறுத்தார். அவர் வலி தாங்க முடியால் அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






