என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது செயலாளர் அன்பழகன்"

    கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #DMK #SenthilBalaji
    சென்னை:

    கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி கடந்த மாதம் திமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைந்தார்.

    அப்போது பேசிய அவர், கரூர் மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப என்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளேன் என்றார். 

    இந்நிலையில், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    மேலும், ஏற்கனவே மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த நன்னியூர் ராஜேந்திரன் திமுக நெசவாளர் அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்துள்ளார். #DMK #SenthilBalaji
    சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பழகன் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #KAnbazhagan #MKStalin #ApolloHospital
    சென்னை:

    தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் (வயது 96), வயது முதிர்வு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றார். அந்த விழாவிலும் அவரால் முழுமையாக இருக்க முடியவில்லை.

    இந்தநிலையில், மாலை க.அன்பழகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சளித்தொல்லையால் மூச்சுவிட சிரமப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். குழாய் மூலம் சளி வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    ஆஸ்பத்திரியில் க.அன்பழகன் அனுமதிக்கப்பட்ட தகவலை கேள்விப் பட்டதும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். இதேபோல், தி.மு.க. பொருளாளர் துரைமுருகனும், மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.யும் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.



    சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பழகனின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த பின் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியார்களிடம் கூறியதாவது:

    நெஞ்சில் நோய்தொற்று ஏற்பட்டுள்ளதால் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.  க.அன்பழகன் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். எனக்கூறினார்.#DMK #KAnbazhagan #MKStalin #ApolloHospital
    திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். #DMK #Anbalagan #ApolloHospital
    சென்னை:

    திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க. அன்பழகன். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்க்ளை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

    இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு திடீரென இன்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    தகவல் அறிந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். #DMK #Anbalagan #ApolloHospital
    திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #DMK #Anbalagan #AppolloHospital
    சென்னை:

    திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க. அன்பழகன். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்க்ளை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று இரவு திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    தகவல் அறிந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். #DMK #Anbalagan #AppolloHospital
    ×