என் மலர்
நீங்கள் தேடியது "generat seceretary anbalagan"
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #DMK #SenthilBalaji
சென்னை:
கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி கடந்த மாதம் திமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைந்தார்.
அப்போது பேசிய அவர், கரூர் மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப என்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளேன் என்றார்.
இந்நிலையில், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மேலும், ஏற்கனவே மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த நன்னியூர் ராஜேந்திரன் திமுக நெசவாளர் அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்துள்ளார். #DMK #SenthilBalaji






