என் மலர்
நீங்கள் தேடியது "சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது"
திருப்பூர்:
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4-ந் தேதி இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்துக்காக சேர்ந்தார்.
மறுநாள் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் தாயின் வயதை ஆய்வு செய்த போது அவர் 14 வயதே ஆன சிறுமி என்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் டாக்டர்கள் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக குழந்தைகள் நல அமைப்பினர் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் தாய் அவரது தந்தைக்கு தெரியாமல் 22 வயதான இளைஞர் ஒருவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகி குழந்தை பிறந்தது தெரியவந்தது. பின்னர் குழந்தைகள் நல அமைப்பினர் சிறுமி, குழந்தை மற்றும் அவரை திருமணம் செய்த வாலிபர் ஆகியோரை மாவட்ட சமூக நல அலுவலரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேரையும் சமூக நல கோர்ட்டில் ஆஜர் படுத்த உள்ளனர்.
நீதிபதி விசாரணை நடத்திய பின்னர் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய், அவரை திருமணம் செய்த வாலிபர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.
பெற்றோர் பெரும்பாலான நாட்களில் வேலைக்கு சென்றதால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டது. இதனை பெற்றோரும் கண்டு கொள்ள வில்லை என கூறப்படுகிறது.
சிறுமிக்கு வயிறு பெரிதாக காணப்பட்டது. இதனை காலம் கடந்து உணர்ந்த பெற்றோர் உடனே சிறுமியை ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்த போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கருவை கலைக்க முடியுமா? என டாக்டர்களிடம் கேட்டனர். நிலைமை கைமீறியதால் அதற்கு சாத்தியம் இல்லை என மறுத்து விட்டனர்.
இதனிடையே அந்த சிறுமிக்கு ஆபரேசன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. மைனர் சிறுமி என்பதால் பிறந்த குழந்தை மதுரையில் உள்ள காப்பகத்தில் ஓப்படைக்கப்பட்டது. அந்த சிறுமி விருதுநகரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
சிறுமியின் வாழ்க்கையை சீரழித்து கர்ப்பமாக்கிய நபர் யார்? என தெரிய வில்லை. இதுகுறித்து சிறுமியின் தாயார் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






