என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 125070"

    • முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கி கவுரவித்தனர்.
    • ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 7 முறை தனது நிலைப்பாட்டினை ஓ.பன்னீர்செல்வம் மாற்றியுள்ளார் என்று ஆர்.பி.உதய குமார் கூறினார்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அ.தி.மு.க 50-வது ஆண்டு பொன்விழா, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., பிறந்தநாள் விழா நடந்தது.

    நலத்திட்ட உதவிகள்

    நிகழ்ச்சிக்கு மகளிர் அணி பொறுப்பாளர் சுப்புலட்சுமி சந்திரன் தலைமை தாங்கினார். எட்டயபுரம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜகுமார் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கி கவுரவித்தனர். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 7 முறை தனது நிலைப்பாட்டினை ஓ.பன்னீர்செல்வம் மாற்றியுள்ளார்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.பின்னர் ராஜினாமா செய்தார்.

    அதன் பின்னர் தர்மயுத்தம் தொடங்கினார். பின் தி.மு.கவுடன் இணைந்து சட்டமன்றத்தில் அ.தி.மு.கவிற்கு எதிராக வாக்களித்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சியின் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இணைக்கப்பட்டு துணை முதல்வர், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இருந்த போதிலும் அவரிடம் இருந்து ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவில்லை.

    முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கும் போது ஓ.பி.எஸ். மவுன யுத்தம் நடத்தினார். இதனால் அ.தி.மு.க செல்வாக்கு 5 சதவீதம் சரிந்தது.

    மவுன யுத்தம்

    எப்போது எல்லாம் தனக்கு பதவி கிடைக்க வில்லையோ அப்போது எல்லாம் ஒரு மவுன யுத்தத்தினை தொடங்குவார். அதற்கு பெயர் தர்மயுத்தம் என்று சொல்வார்.ஓ.பி.எஸ் மவுனமாக தொடங்கும் யுத்தம் தர்மயுத்தம் அல்ல அது துரோக யுத்தம் .

    சட்டமன்ற உறுப்பி னர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அணிவகுத்து நிற்கின்றனர்.

    எப்போது எல்லாம் தன் பதவிக்கு ஆபத்து வருகிறதோ, அப்போது எல்லாம் கட்சிக்கு ஆபத்து போன்ற மாயத்தோற்றத்தினை ஓ.பி.எஸ் உருவாக்குவார். அதற்காக போராடுவார், தர்மயுத்தத்தினை நடத்துவார்.அவருடைய யுத்தங்கள் தோல்வியில் தான் முடிந்துள்ளது தவிர ஓ.பி.எஸ்க்கு வெற்றி தராது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மோகன், சிவபெருமாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் வேலுச்சாமி,ஊராட்சி குழு தலைவி சத்யா, மகளிர் அணி ரத்தினம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் சீனி ராஜீ, அ.தி.மு.க புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி, எட்டயபுரம் பேரூராட்சி கவுன்சிலர் அய்யம்மாள் கருப்பசாமி, வார்டு செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், கார்ட்டன் பிரபு, ஒன்றிய நகர, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியையொட்டி சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    எட்டயபுரம்:

    எட்டயபுரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு ஒட்டுமொத்த தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

    எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    எனது குப்பை எனது பொறுப்பு என்ற விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமானது எட்டயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டினர். பேரூராட்சியை தூய்மையான நகரமாக முன்னெடுப்பது குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் கதிர்வேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    எட்டயபுரம் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எட்டயபுரம்:

    மதுரையில் இருந்து மூலிகை செடிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்தது. லாரியை நெல்லையை அடுத்த மானூரை சேர்ந்த மோகன்(வயது 52) என்பவர் ஓட்டினார். லாரி எட்டயபுரம் அருகே உள்ள கோடாங்கிபட்டி விலக்கு பகுதியில் பாலத்தில் சென்றபோது பின்னால் மதுரையில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு வேன் தூத்துக்குடி நோக்கி வந்தது.

    வேனை மதுரை கன்னியம்பட்டியை சேர்ந்த பிரகாசம்(31) என்பவர் ஓட்டினார். எதிர்பாராதவிதமாக லாரியின் பின்னால் வேன் பயங்கரமாக மோதியது. இதில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலத்தில் இருந்து ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.

    டிரைவர் மோகன் லாரிக்கு அடியில் சிக்கினார். இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குபதிந்து வேன் டிரைவர் பிரகாசத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×