என் மலர்
நீங்கள் தேடியது "கர்ப்பிணி பெண் தற்கொலை"
ஈரோட்டில் திருமணமான 2 வருடத்தில் கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது.
ஈரோடு:
ஈரோடு பழைய கரூர் ரோடு மோகன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். ஜேசிபி டிரைவர். இவரது மனைவி கோபிகா (வயது 35).
தமிழ்ச்செல்வனுக்கும் கோபிகாவும் கடந்த 2 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. கோபிகா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு கோபிகா வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கினார்.
கீழ்ப்பகுதியில் தமிழ்ச்செல்வன் மற்றும் அவர் குடும்பத்தினர் தூங்கினர்.
இந்நிலையில் தமிழ்ச்செல்வன் காலை மனைவியை பார்க்க மேல் அறைக்கு சென்றார். அப்போது அறையில் மனைவி கோபிகா தூக்குப் போட்டு பிணமாக தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோபிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆவதால் ஈரோடு ஆர்டிஓ முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார்.

பாப்பாரப்பட்டி அருகே கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பிக்கிலியில் பெரியூரைச் சேர்ந்தவர் சண்முகம்(27). கட்டிட மேஸ்திரியான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கம்மாள் (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரக்ஷிதா (1) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் அங்கம்மாள் மீண்டும் கர்ப்பமானார். 4 மாத கர்ப்பிணியான அவர் இடுப்பு வலியால் அவதிப்பட்டார். நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அவர் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உறவினர்களுக்கும், பாப்பாரப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கம்மாள் என்ன? காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 3 வருடங்கள் ஆன நிலையில் அங்கம்மாள் தற்கொலை செய்து கொண்டதால் சப்-கலெக்டர் சிவன் அருள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரவாயலில் கர்ப்பிணி பெண் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
மதுரவாயல் சக்கரபாணி நகரை சேர்ந்தவர் கிரீஷ். இவரது மனைவி ரீனா (வயது 40). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லாததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் ரீனா 3 முறை கர்ப்பமானார். எனினும் குழந்தை கரு கலைந்தது. தற்போது 4-வது முறையாக அவர் கர்ப்பமாகி இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சென்றிருந்த போது குழந்தை கருவிலேயே இறந்து இருப்பது தெரிந்தது.
குழந்தையின் கருவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் ரீனா மனவேதனை அடைந்தார். அவருக்கு கணவர் ஆறுதல் கூறி வந்தார்.
இந்த நிலையில் மனவேதனையில் இருந்த ரீனா வீட்டில் உள்ள மின்விசியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு கணவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews