என் மலர்
நீங்கள் தேடியது "எம்எல்சி"
- சிக்கமகளூரு மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- இதற்கு தகுந்த தீர்வு எடுக்க வேண்டும் என்றார் போஜே கவுடா.
பெங்களூரு:
கர்நாடக மேல்சபையில் நேற்று சிக்மகளூரு மாவட்டத்தில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் போஜே கவுடா பேசியதாவது:
சிக்மகளூரு மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு தகுந்த தீர்வு எடுக்க வேண்டும்.
தடுப்பூசியால் ரேபிஸ் மட்டுமே தடுக்க முடியும். கடிப்பதை தடுக்க முடியாது. நான் கடிக்கும் நாய்கள் பற்றி பேசுகிறேன்.
நாய்களின் நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. முந்தைய உத்தரவை மாற்ற உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யுங்கள்.
பள்ளிக் குழந்தைகள், சாதாரண மக்களை நாய்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
நான் நகராட்சி தலைவராக இருந்தபோது, 2,800 நாய்களுக்கு, இறைச்சியில் மருந்து தெளித்து கொன்றோம். பின், அவை ஒரு தென்னை மரத்தின் கீழ் புதைக்கப்பட்டன.
விலங்குகள் மீது நமக்கும் அக்கறை உண்டு, ஆனால் விலங்கு பிரியர்கள் மற்றொரு அச்சுறுத்தல்.
நீங்கள் சிறு குழந்தைகளின் துன்பங்களைப் பார்க்கிறீர்கள். இதைப் பற்றி நீங்கள் தினமும் செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் படிக்கிறீர்கள். இது ஒவ்வொரு நாளும் நடக்கிறது. நம் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தேவைப்பட்டால் சிறைக்கும் செல்வோம் என தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா கட்சி எம்.எல்.சி.யாக இருப்பவர் ஜெய்வீர் சிங். இவரது மகன் அரவிந்த்குமார் சிங். இவரை கவுதம புத்தர் நகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. பா.ஜனதா இன்னும் அங்கு வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதுபற்றி ஜெய்வீர்சிங் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-
எனது மனைவி ராஜ்குமார் சவுகான், 3 மகன்கள், மருமகன் என குடும்பமே பா.ஜனதாவுக்கு ஆதரவானவர்கள். ஆனால் எனது மகன் அரவிந்த்குமார் சிங் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதில் இருந்து அவரது கொள்கை வேறுவிதமாக உள்ளது. திருமணத்துக்கு பின் தனியாக வசித்துவருகிறார்.
நான் 2017-ல் பா.ஜனதாவில் சேர்ந்தபோதே அரவிந்த் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக எங்களது பல்கலைக்கழகத்தில் வேந்தர் பதவியில் இருந்த அவர் விடுவிக்கப்பட்டார். அவருடனான சமூக, அரசியல் உறவுகள் எல்லாம் முடிந்துவிட்டது. எனது குடும்பத்தில் இருந்த அரசியல் மாறுபாட்டை சாதகமாக பயன்படுத்தி காங்கிரஸ் தந்திரமாக எனது குடும்பத்துக்குள்ளேயே அரசியல் சதி செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






