என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர் விமான வீரர் விங் கமாண்டர்"

    • ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர்.
    • அவருக்கு 2,500 மணி நேரத்திற்கும் மேலான விமானப் பயண அனுபவம் உள்ளது.

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர்.

    கர்னல் சோபியா குரேஷி :

    குஜராத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி, 35, இந்திய ராணுவத்தின் சிக்னல் கார்ப்ஸில் அதிகாரியாக உள்ளார். 1999 ஆம் ஆண்டு ஆபிஸர்ஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்து ராணுவத்தில் நியமிக்கப்பட்ட பிறகு, கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். சோபியாவின் தாத்தாவும் தந்தையும் இராணுவத்தில் இருதவர்கள். சோபியா குரேஷி மெக்கானைஸ்டு காலால் படையைச் சேர்ந்த அதிகாரியை மணந்துள்ள்ளார். இதனால் சோபியா முழுமையான ராணுவ குடும்ப பின்னணியை கொண்டுள்ளார்.

    2016 ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற 'எக்சர்சைஸ் ஃபோர்ஸ் 18' என்ற பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் 40 பேர் கொண்ட இந்திய இராணுவக் குழுவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி கர்னல் சோபியா குரேஷி ஆவார்.

    சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 18 ஆசியான் பிளஸ் நாடுகள் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்றன. அனைத்து ASEAN Plus அணிகளிலும் இவர் மட்டுமே பெண் படைத் தளபதி ஆவார்.

    கூடுதலாக, அவர் ஆறு ஆண்டுகள் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் (PKO) பங்கேற்றார். அவர் 2006 ஆம் ஆண்டு காங்கோவில் ஐ.நா. பணியிலும் பணியாற்றினார்.

     விங் கமாண்டர் வியோமியா சிங்:

    வியோமிகா சிங் சிறுவயதிலிருந்தே விமானியாக வேண்டும் என்று கனவு கண்டார். பள்ளி நாட்களில் NCC-யில் சேர்ந்த வியோமிகா பொறியியல் படிப்பை முடித்த பிறகு, இந்திய விமானப்படையில் ஹெலிகாப்டர் விமானியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

    டிசம்பர் 18, 2019 அன்று, அவருக்கு பறக்கும் பிரிவில் நிரந்தர ஆணைய அந்தஸ்து வழங்கப்பட்டது. அவருக்கு 2,500 மணி நேரத்திற்கும் மேலான விமானப் பயண அனுபவம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் உயரமான பகுதிகள் உட்பட மிகவும் சவாலான பகுதிகளில் சேடக் மற்றும் சீட்டா ஹெலிகாப்டர்களை அவர் இயக்கியுள்ளார். வடகிழக்கு மற்றும் பிற பகுதிகளில் இயற்கைக் பேரிடர் மீட்புப் பணிகளில் பங்காற்றியுள்ளார்

    இந்திய விமானப்படையின் போர் விமான வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் தனது விடுமுறை முடியும் முன்பே ஸ்ரீநகரில் உள்ள தனது விமானப்படைத் தளத்துக்கு அவர் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Abhinandan #IAFPilot
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படையின் போர் விமானியான சென்னை வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் கடந்த பிப்ரவரி 27-ந் தேதி தனது விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் சுடப்பட்டதால் விமானத்தில் இருந்து வெளியேறி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் அவரை பாகிஸ்தான் கடந்த 1-ந் தேதி இந்தியாவிடம் ஒப்படைத்தது.

    அவர் நாடு திரும்பியதும் டெல்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வேறு மருத்துவ சோதனைகள், ராணுவ விளக்க நடவடிக்கைகளுக்கு பின்னர் 12 நாட்களுக்கு முன்பு 4 வாரங்கள் விடுமுறையில் வீட்டுக்கு செல்லும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. சென்னையில் உள்ள வீட்டுக்கு திரும்பிய அவருக்கு மருத்துவ குழு உடல் தகுதி பரிசோதனை நடத்தியது. பின்னர் தனது விடுமுறை முடியும் முன்பே ஸ்ரீநகரில் உள்ள தனது விமானப்படைத் தளத்துக்கு அவர் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×