என் மலர்
நீங்கள் தேடியது "கட்சி தொண்டர்கள்"
வாக்குகள் எண்ணும் போது பிரச்சினையில் ஈடுபடாமல் இருக்க அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் நடந்தது.
வரதராஜன்பேட்டை:
சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அரியலூர் மாவட்டம் தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை-அறிவியல் கல்லூரியில் அடுத்த மாதம் (மே) 23-ந்தேதி எண்ணப்பட உள்ளது. இந்தநிலையில் வாக்குகள் எண்ணும் போது பிரச்சினையில் ஈடுபடாமல் இருக்க அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது ஆண்டிமடம் பகுதியில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் ஒத்துழைப்பு கொடுத்ததற்கு அரசியல் கட்சியினருக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்ட இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், வாக்கு எண்ணிக்கையின் போதும் அனைத்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு சென்னை அண்ணாநகர் தொகுதி திமுக தொண்டர்கள் அமைதி பேரணி நடத்தி தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர். #DMK #Karunanidhi #RIPKarunanidhi
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7-ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது இழப்பைத் தாங்க முடியாத தொண்டர்கள் கண்ணீரஞ்சலி, இரங்கல் கூட்டம் என பல்வேறு வழிகளில் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தி.மு.க. தலைவரின் நினைவிடத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கருணாநிதியின் நினைவிடத்துக்கு தொண்டர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னை மேற்கு மாவட்டம் அண்ணா நகர் தொகுதி தி.மு.க. சார்பில் இன்று அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் தொண்டர்கள் அமைதிப் பேரணி நடத்தி வருகின்றனர். #DMK #Karunanidhi #RIPKarunanidhi

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் தகனத்துக்கு இடம் தர மறுத்தது நியாயமற்றது என வைகோ தெரிவித்துள்ளார். #RIPKalaignar #Karunanidhi #DMK #கலைஞர்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தின் அருகில் இடம் தர தமிழக அரசு மறுத்துள்ளது. அதற்கு சட்டரீதியாக பல்வேறு காரணங்களையும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வைகோ, கோடான கோடி உள்ளங்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு கலைஞர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அண்ணா நினைவிடத்தில் இடம்தர மறுப்பது நியாயமற்றது எனவும், இடம் தர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். #RIPKalaignar #Karunanidhi #DMK #கலைஞர்

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து திமுக தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து கண்ணீர் கடலாய் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். #RIPKalaignar
சென்னை:
காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடந்ததாக காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது கருணாநிதி மாலை 6.10 மணியளவில் தனது இவ்வுலக வாழ்வை நிறைவு செய்தார். இந்த தகவல் அறிந்த அவரது தொண்டர்கள் கடும் அதிர்ச்சியும், சொல்ல முடியா துன்பமும் அடைந்துள்ளனர். மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது தொண்டர்கள் மீண்டும் அவர் எழுந்து வர மாட்டாரே எனும் அதீத துன்பத்தோடு, தங்கள் கண்ணீர் வற்றும் படி கதறி அழுது தங்கள் துன்பத்தை வெளிக்காட்டி வருகின்றனர். #RIPKalaignar

இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு விரைந்தனர். நேற்று மாலை முதல் தொண்டர்களின் கூட்டம் அதிகரித்ததால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.