என் மலர்

  செய்திகள்

  திமுக தலைவர் கருணாநிதி மறைவு - கதறும் தொண்டர்க்கூட்டம்
  X

  திமுக தலைவர் கருணாநிதி மறைவு - கதறும் தொண்டர்க்கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து திமுக தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து கண்ணீர் கடலாய் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். #RIPKalaignar
  சென்னை:

  காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடந்ததாக காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

  இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு விரைந்தனர்.  நேற்று மாலை முதல் தொண்டர்களின் கூட்டம் அதிகரித்ததால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், தற்போது கருணாநிதி மாலை 6.10 மணியளவில் தனது இவ்வுலக வாழ்வை நிறைவு செய்தார். இந்த தகவல் அறிந்த அவரது தொண்டர்கள் கடும் அதிர்ச்சியும், சொல்ல முடியா துன்பமும் அடைந்துள்ளனர். மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது தொண்டர்கள் மீண்டும் அவர் எழுந்து வர மாட்டாரே எனும் அதீத துன்பத்தோடு, தங்கள் கண்ணீர் வற்றும் படி கதறி அழுது தங்கள் துன்பத்தை வெளிக்காட்டி வருகின்றனர். #RIPKalaignar
  Next Story
  ×