search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Singharavelar"

    • வேல்வாங்குதல் நிகழ்ச்சி நாளை நவம்பர் 17- ம் தேதி நடைபெறுகிறது.
    • டிசம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்காரம் செய்தார் முருகன் என கந்தபுராணம் கூறுகிறது.

    அதன்படி வரலாற்று சிறப்புமிக்க இவ்வாலயத்தின் கந்த சஷ்டி விழா 13-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் வேல்வாங்குதல் நிகழ்ச்சி நாளை நவம்பர் 17- ம் தேதி நடைபெறுகிறது.

    இதனையொட்டி, நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.17) விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதை ஈடு செய்யும் வகையில், டிசம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) நாகை மற்றும் திருமருகல் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கார வேலரின் 164-வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • உழைக்கும் மக்களின் நலன் காக்க உறுதியேற்று உழைப்போம்.

    சென்னை:

    சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் 164-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வாழ்த்தி செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தொழிலாளர்களின் தோழராக பொதுவுடைமை கருத்தியலைத் தூக்கிப் பிடித்த சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் பிறந்த நாள் இன்று. புரட்சி புலியென வாழ்ந்திட்ட அவர் வாழ்வை போற்றுவோம். உழைக்கும் மக்களின் நலன் காக்க உறுதியேற்று உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    ×