search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senguttai"

    • நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
    • மனுவை நிராகரித்த நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை ஜூலை 8-ந் தேதிக்குள் அகற்ற உத்தரவிட்டது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி ராயர்பாளையம் செங்குட்டை பகுதியில் 42 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வந்தனர். இந்தநிலையில் பல்லடம் வட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செங்குட்டை ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அங்கு வசிக்கும் மக்களுக்கு வருவாய் துறை மூலம் ஏற்கனவே நோட்டிஸ் வழங்கி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினர் சென்ற போது அந்த வசித்து வரும் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. மனுவை நிராகரித்த நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை ஜூலை 8-ந் தேதிக்குள் அகற்ற உத்தரவிட்டது.இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற திருப்பூர் கோட்டாட்சியர் பண்டரிநாதன், பல்லடம் தாசில்தார் நந்தகோபால், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், நகராட்சி ஆணையாளர் விநாயகம், தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார், மற்றும் போலீசார், தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, நகராட்சி பணியாளர்கள் உள்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த பகுதிக்கு சென்றனர்.

    அங்கிருந்தவர்கள் வீடுகளை காலி செய்ய அவகாசம் கேட்டனர் பின்னர் அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், ஒரு நாள் அவகாசம் அளிக்குமாறும் அதற்குள் தாங்களாகவே வீடுகளை காலி செய்து விடுவதாகவும் குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அங்கிருந்த வீடுகள் மற்றும் கட்டடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. பல்லடம் தாசில்தார் நந்தகோபால், மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிநடைபெற்றது. வருவாய்த்துறையினர், போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    • நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
    • ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி ராயர்பாளையம் செங்குட்டை பகுதியில் 42 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். பல்லடம் வட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செங்குட்டை ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அங்கு வசிக்கும் மக்களுக்கு வருவாய் துறை மூலம் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினர் சென்ற போது அந்த வசித்து வரும் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் பல்லடம் தாசில்தார் நந்தகோபால்உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அவர்களிடம் அங்கு வசிக்கும் மக்கள் கால அவகாசம் மற்றும் மாற்று இடம் வழங்க கேட்டனர்.இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. மனுவை நிராகரித்த நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை நாளை 8ந்தேதிக்குள் அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து பல்லடம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் குடியிருப்புவாசிகள் திடீரென வீடுகளை காலி செய்தால், தொழில் மற்றும் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் .எனவே அந்த இடத்திற்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த தாசில்தார் நந்தகோபால் நீதிமன்ற உத்தரவை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது. நாளைக்குள் ஆக்கிரமிப்புப் குடியிருப்புகளை அகற்றிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கு குடியிருப்புவாசிகள் மேலும் அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். தாசில்தார் மறுக்கவே கூட்டம் முடிவுற்றது.

    ×