search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seed paddy"

    • நெல் விதைகள், உயிர் உரங்கள் உள்ளிட்டவற்றின் மானிய விவரம் குறித்து கூறப்பட்டது.
    • நெல் பயிரில் விதை நேர்த்தி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கபட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் கிராம அளவில் வேளாண் முன்னேற்ற குழுக்களுக்கு பயிற்சி மூலங்குடி கிராமத்தில் நடைபெற்றது.

    பயிற்சிக்கு மூலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வேல் தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை அலுவலர் செல்வி அனுஷா முன்னிலை வகித்தார்.

    நிகழச்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் ராஜா கலந்து கொண்டு, நெல் பயிரில் விதை நேர்த்தி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    தொடர்ந்து பேசிய விதைச்சான்று அலுவலர் சதீஷ் விதை பண்ணை அமைக்கும் வழிமுறைகள், தரமான விதை உற்பத்தி பற்றி விளக்கினார்.

    நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மணிகண்டன், விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவைகள் உள்ளிட்டவற்றின் மானிய விவரம் குறித்து விளக்கம் அளித்தார்.

    முடிவில் விவசாயி குமரேசன் நன்றி கூறினார் தெரிவித்தார்.

    • விதை நெல் திருவையாறு வேளாண்மை விற்பனை மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • 50 சதவீத மானியத்தில் பெற்று நாற்று விட்டு நடவு பணியை மேற்கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சினேகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:-

    குறுவை, சாகுபடிக்கு நாளை மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே நடப்பு குறுவை, பட்டத்திற்கு தேவையான விதை நெல் திருவையாறு வேளாண்மை விற்பனை மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கால தாமதம் இல்லாமல் விதை நெல்லை 50 சதவீத மானியத்தில் பெற்று நாற்று விட்டு நடவு பணியை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், மண்வெட்டி, கடப்பாரை, இருப்புசட்டி, கதிர் அரி வாள், களைகொத்து ஆகியவை 50 சதவீத மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விதை நெல் விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • புதிய விதை விற்பனை உரிமம் பெற விண்ணப்பம் செய்வோர் இணையதளம் வாயிலாகவும், ஈரோடு, விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாகவும் உரிய ஆவணங்களை கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    தாராபுரம் :

    விதை நெல் விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் மாயகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தாராபுரம் வட்டாரத்தில் விற்பனை உரிமம் பெற்ற 132 விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் நெல், சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, சூரியகாந்தி, நிலக்கடலை மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    விதை விற்பனை நிலையங்கள் அனைத்தும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். விதை விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். தவறும்பட்சத்தில விதை வினியோகம் செய்தவர் மீது விதைகள் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    புதிய விதை விற்பனை உரிமம் பெற விண்ணப்பம் செய்வோர் இணையதளம் வாயிலாகவும், ஈரோடு, விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாகவும் உரிய ஆவணங்களை கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×